ஹீரோ .. ஹீரோ ..
திரையுலக மும்மூர்த்திகள் இணைந்து ஒரு படத்தில் கலாய்க்க வருகிறார்கள்.
அந்த மும்மூர்த்திகள் வேறு யாரும் அல்ல. கமல்ஹாசன், சத்யராஜ் மற்றும் நாசர் தான். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கவுள்ளனர்.
படத்திற்கு "சண்டியர்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே நடிகர் பிரேம் நடித்து "சண்டியர் வர்ராறு" என்று ஒருபடம் வந்து விட்டதால் படத்தின் பெயர் மாறலாம் எனத் தெரிகிறது.
படத்தை கமல் அல்லது நாசர் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இறுதி முடிவுஎடுக்கப்படவில்லை.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம். வித்தியாசமான, தெனாவட்டான கூட்டணிதான்!
வாட்டத்தில் ஸ்னேகா!
ஸ்னேகா நடித்து தோல்வியடைந்த படங்களின் பட்டியலில் வசீகராவும் சேர்ந்துவிட்டது. படம் நன்றாக இருப்பதாக பேச்சுஇருந்தாலும் திருட்டி வி.சி.டியால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துவிட்டது. இதனால் படத்தை பல தியேட்டர்காரர்கள்தூக்கிவிட்டார்கள்.
தான் நடித்த படங்கள் தோல்வியடைவதால் வருத்தத்தில் இருந்த ஸ்னேகாவுக்கு "வசீகரா"வின் தோல்வி துவளச்செய்துவிட்டதாம்.
வசீகராவின் தோல்வியால் ஸ்னேகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.


Click it and Unblock the Notifications











