twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்க்கை கழட்டி முகத்தை காட்டியும்.. சல்மான் கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவலர்!

    |

    சென்னை: டைகர் 3 படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் உள்ளிட்ட படக்குழு நேற்று ரஷ்யா செல்ல மும்பை விமான நிலையத்துக்கு விரைந்தனர்.

    நடிகர் சல்மான் கான் காரை விட்டு இறங்கியதை பார்த்ததும் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், அவரை போட்டோ எடுக்கவும் முண்டியடித்தனர்.

    பின்னர் மாஸ்க்கை அணிந்து கொண்டு சென்ற சல்மான் கான் செக்கிங் ஏரியாவுக்கு சென்றதும் மாஸ்க்கை கழட்டி விட்டு உள்ளே நுழைய முயற்சித்தார்.

    அட...இது கூட நல்லா இருக்கே...கான் நடிகர்கள் உருவாக்கும் புதிய டிரெண்ட் அட...இது கூட நல்லா இருக்கே...கான் நடிகர்கள் உருவாக்கும் புதிய டிரெண்ட்

    தடுத்து நிறுத்தம்

    தடுத்து நிறுத்தம்

    நடிகர் சல்மான் கான் செக் செய்யப்படாமல் உள்ளே நுழைவதை அறிந்த CISF காவலர் ஒருவர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. மேலும், அந்த காவலர் செய்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

    டைகர் 3

    டைகர் 3

    பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான சல்மான் கானின் ராதே திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அடுத்ததாக இரு முறை தனக்கு வெற்றி கொடுத்த டைகர் படத்தின் அடுத்த பாகமான டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். இயக்குநர் மணிஷர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    ரஷ்யாவில் ஷூட்டிங்

    ரஷ்யாவில் ஷூட்டிங்

    கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு நடத்த ஏகப்பட்ட படக்குழுவினர் கிளம்பி வருகின்றனர். நடிகர் சல்மான் கான், கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் நடைபெற உள்ள டைகர் 3 படப்பிடிப்பில் கலந்து கொள்ள புறப்பட்டுள்ளனர்.

    மும்பை விமான நிலையம்

    மும்பை விமான நிலையம்

    ரஷ்யா செல்வதற்காக நடிகர் சல்மான் கான் கருப்பு நிற டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு காரில் இருந்து மாஸ்க் அணியாமல் இறங்கினார். சல்மான் கானை பார்த்ததும் ஏகப்பட்ட ரசிகர்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க ஆரம்பித்தனர். திடீரென அங்கே ஒரு பெரிய கூட்டமே சூழந்தது.

    மாஸ்க்கை கழட்டி

    மாஸ்க்கை கழட்டி

    உடனடியாக மாஸ்க் அணிந்து கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டார் நடிகர் சல்மான் கான். பின்னர், தனிப் பாதை இல்லை என்பதை அறிந்த அவர், வரிசையில் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு பயணிகளையும் சோதனை போட்டு வந்த நிலையில், சோதனைக்கு நிற்காமல் மாஸ்க்கை கழட்டி காவலர்களுக்கு முகம் தெரிவது போல உள்ளே நுழைய முயன்றார்.

    கடமையை செய்த காவலர்

    ஆனால், ஒரு இளம் CISF காவலர் நடிகர் சல்மான் கான் சோதனையை தவிர்த்து விட்டு விமான நிலையத்துக்குள் உள்ளே நுழைய முயன்றதை அறிந்து உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, சார் இந்த பக்கம் போங்க சோதனை செய்யணும் எனக் கூற நடிகர் சல்மான் கான் செக்கிங் பணி நடைபெறும் பக்கத்திற்கு திரும்பினார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    குவிகிறது பாராட்டு

    குவிகிறது பாராட்டு

    பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் கானையே தடுத்து நிறுத்தி தனது கடமையை சரியாக செய்த அந்த காவலரை ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு அதிகாரியும் இவரை போலவே இருந்தால் நாடு நிச்சயம் முன்னேறும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

    English summary
    CISF officer stopped Salman Khan at Mumbai airport video goes viral and several netizens praised that officer who did his duty perfectly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X