ஹீரோ .. ஹீரோ ..
தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அஜீத்தின் சிட்டிசன் திரைப்படம் சனிக்கிழமைரிலீசாகியது.
முதலில் ஆளவந்தானுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆளவந்தான் தள்ளிப்போவதால், சிட்டிசன் ரிலீசில் முந்திக் கொண்டுவிட்டது.
அஜீத்திற்கு இணையாக வசுந்தரா தாஸ், மீனா உள்ளிட்ட கதாநாயகியர்கள் நடித்துள்ளனர். கெளவர வேடத்தில்நக்மா ஆடியுள்ளார்.
படத்தை ஷரவணன் சுப்பையா இயக்கியுள்ளார். நக் ஆர்ட்ஸ் சார்பில் சக்ரவர்த்தி படத்தைத் தயாரித்துள்ளார்.தேவா இசையமைத்துள்ளார்.
கமலஹாசனுக்கு மேக்கப் போட உதவிய மும்பை மேக்கப் மேன் உதவியுடன் அஜீத்தை வித்தியாசமான 9கெட்டப்பில் காட்டியுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பைல்கள் மூடப்பட்ட கொலை, குற்றங்களை வெளியே கொண்டு வர முயல்கிறார்ஹீரோ அஜீத். அதைத் தொடர்ந்து சந்திக்கும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக பல மாறுவேடங்களில் அலைகிறார்.இறுதியில் தான் நினைத்ததை சாதித்தாரா என்பதை இன்று முதல் வெளியாகவுள்ள படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
சென்னையில் சிட்டிசன் ரிலீசாகும் தியேட்டர்களில் அஜீத் ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட்களை வைத்துள்ளனர்.தியேட்டர்கள் உள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதலே அப்பகுதிகள் அஜீத்மயமாகி விட்டது.
விஜய்யின் பத்ரி படம் ரிலீசானபோது அவரது கட் அவுட்டிற்கு பல தியேட்டர்களில் பாலாபிஷேகம், பூக்களால்அபிஷேகம் செய்யப்பட்டது. அதற்குப் போட்டியாக அஜீத்திற்கும் அபிஷேகங்கள் செய்ய ரசிகர்கள்திட்டமிட்டுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











