வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்... முதல்வருக்கு நன்றி சொன்ன சூர்யா!
சென்னை : நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் நாளைய தினம் அமேசான் ப்ரைமில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் மூலம் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு நடிகர் சூர்யா தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஜெய் பீம் படம்
நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இந்தப் படம் நாளைய தினம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்தவர்கள் நல்ல கமெண்ட்டுகளை அளித்துள்ளனர். இதன்மூலம் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

வழக்கறிஞர் வேடம்
படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் முதல் முறையாக வழக்கறிஞர் வேடமேற்று பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
Recommended Video

ஒரு கோடி ரூபாய் நிதி
இந்நிலையில் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் நிதியினை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து இந்த நிதியினை அவர் வழங்கியுள்ளார், இந்த சந்திப்பின்போது அவருடன் அவருடைய மனைவியும் நடிகையுமான ஜோதிகா உடன் இருந்தார்.

முதல்வர் பாராட்டு
இந்நிலையில் ஜெய் பீம் படத்தை நேற்றைய தினம் பார்த்ததாகவும் அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பார்வையாளர்கள் மனதில் தாக்கத்தையும் அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்த கலைப்படைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்திற்கு முதல்வர் வாழ்த்து
மேலும் படம் எடுத்ததோடு நில்லாமல் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய நண்பர் சூர்யாவை எத்தனை பாராட்டினாலும் தகும் என்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். ஜெய் பீம் போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நெகிழ்ச்சி தெரிவித்த சூர்யா
இதனிடையே முதல்வரின் இந்தப் பதிவால் வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த உணர்வுப்பூர்வமான பாராட்டு ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படக்குழுவினரின் சார்பில் முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











