உன் ரசிகர் படையிலே.. அண்ணே நாகராஜ் அண்ணே.. சீமானை கட்டியணைத்த சிஎம் விஜய்.. குவியும் மீம்ஸ்!

சென்னை: வாரிசு படத்தின் "தீ தளபதி" பாடல் தான் தற்போது ரசிகர்கள் அதிகம் எடிட்டுக்கு யூஸ் செய்து வருகின்றனர். முதல்வன் படத்தை விட செம பிரம்மாண்டமான ஒரு ரியல் ஜனநாயகன் படத்தை கடந்த சில மாதங்களாகவே தளபதி விஜய் காட்டி வருகிறார்.

தியேட்டருக்குச் சென்று இனிமேல் விஜய் படத்தை பார்க்க முடியாதே என தவித்த ரசிகர்களுக்கு தினமும் முதலமைச்சர் விஜய்யாக உங்களுக்கு காட்சி தருவேன் என விஜய் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் தொடர்ந்து ஒரு வாரமாக டாமினேட் செய்து வருகிறார்.

CM Vijay meets MK Stalin to Seeman turns laughable memes in social media

இந்நிலையில், தன்னை எதிர்த்த எதிர் கட்சித் தலைவர்களை அவர்கள் வீட்டுக்கேச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று மாஸ் காட்டியுள்ளார். அதிலும், தற்குறி, ரோட்டுல போய் நிக்காத அடிபட்டு சாவன்னு சொன்ன சீமான் வீட்டுக்கு விஜய் சென்று அவரை கட்டியணைத்த காட்சிகள் மீம்ஸ்களாக மாறி உள்ளன.

ஓஜி அணில் வெளியே வந்துடுச்சு: சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக முதலமைச்சர் விஜய்யை நேருக்கு நேர் பார்க்காமல் உதயநிதி ஸ்டாலின் தவிர்த்தார் என்றும் விஜய் உறுதிமொழி ஏற்கும் போது உதயநிதியின் ரியாக்‌ஷனை பார்த்தீங்களா என ஏகப்பட்ட செய்திகள் கிளம்பின. ஆனால், உடனடியாக மதியம் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு விஜய் வந்த உடனே முதல் ஆளாக உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற போது அவரது முகத்தில் தெரிந்த சிரிப்பை பார்த்து ஓஜி அணில் வெளியே வந்துடுச்சு என ரசிகர்கள் மீம் போட தொடங்கி விட்டனர். தயாரிப்பாளராக குருவி படத்தை தயாரித்ததில் இருந்தே இருவரும் நல்ல நட்பை பேணி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு திருஷ்டி கழித்த சிஎம்: வைகோ வீட்டுக்கு விஜய் சென்ற போது அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் விசிலுக்குத்தான் ஓட்டுப் போட்டார்கள் என வைகோ அறிமுகப்படுத்த அந்த பெண்கள் விஜய்க்கு திருஷ்டி கழித்தனர். உடனே பதிலுக்கு அந்த பெண்களுக்கு முதலமைச்சர் விஜய் திருஷ்டி கழித்த காட்சிகளை பார்த்து பல ரசிகைகள் அண்ணனின் செயலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

அண்ணே நாகராஜ் அண்ணே: பாமக அன்புமணி ராமதாஸ் இல்லத்துக்கும் விஜய் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வீட்டுக்கு விஜய் வருகிறார் என்றதும் சீமான் வெகு நேரமாக வாசலில் காத்திருக்க, விஜய் வந்தவுடனே அவரை ஆரத்தழுவிக் கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் காட்சியை மீமாக போட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், சாட்டை துரைமுருகன் எங்கே பாஸ் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X