முதல்வன் பட சீனையும் ரீக்ரியேட் செய்த சிஎம் விஜய்.. ஃபயர் விட்டுக் கொண்டாடும் ஜன நாயகன் ஆர்மி!
சென்னை: மருத்துவர்களுடன் ஒன்றாக அமர்ந்து க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டு நண்பன் படத்தை நினைவுப்படுத்திய முதலமைச்சர் விஜய் முதல்வன் படத்தில் வருவது போல தலைமைச் செயலகத்தில் இருந்து இறங்கி வரும் காட்சிகளையும் வெளியிட்டு முதல்வன் படத்தையும் ரீக்ரியேட் செய்துவிட்டார் என தளபதி ரசிகர்கள் முதல்வன் பட மியூசிக்கை இணைத்து ஃபயர் விட்டு வருகின்றனர்.
விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் அடுத்த வாரம் ஜூலை 23ம் தேதியே திரைக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓவர்சீஸில் 24ம் தேதி படம் வெளியாகும் என டிக்கெட் புக்கிங்கிலும் ஆரம்பமாகி விட்டன.

புதிய டிரைலருடன் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மீண்டும் தளபதி ரசிகர்கள் ஆன்லைனில் செம ஃபயராக சோஷியல் மீடியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதல்வன்னே.. முதல்வன்னே: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க வேண்டியது என்றும் ஆனால், அவை மிஸ்ஸாகி கடைசியாக அந்த பட வாய்ப்பு அர்ஜுனுக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்த போது கூட, ஷங்கர் சார் ஸ்டைலில் ஒரு மாஸா ஒரு படம் பண்ணனும் என்று விஜய் ஆசைப்பட்டு வெளிப்படையாகவே கூறினார். திரையில் நடக்காத அந்த விஷயம் தற்போது ரியலில் அவரை முதலமைச்சராக மாற்றி Just God Things என சொல்ல வைத்துள்ளது.
கோட்டையில் கெத்தாக: முதல்வன் படத்தில் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கோட் சூட் அணிந்துக் கொண்டு வருவது போல ஷங்கர் இயக்கியிருந்தார். தற்போது அதையும் நிஜமாகவே சிஎம் விஜய் மாற்றிக் காண்பித்துள்ளார். வேட்டி, சட்டை அணிந்த முதலமைச்சர்களையே பார்த்த தமிழ்நாட்டில் கோட் சூட் போட்டுக் கொண்டு விஜய் கோட்டையில் செம கெத்தாக போஸ் கொடுத்து வருகிறார். அரசு அதிகாரிகளுடன் அவர் கோட்டை படியில் இருந்து இறங்கி வரும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் முதல்வன் படத்தை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ரீக்ரியேட் செய்து வருகிறார் விஜய் என்றும் இவர் தான் ரியல் ஜன நாயகன் என்றும் கூறுகின்றனர். விஜய் படங்களை தியேட்டரில் மிஸ் பண்ணினாலும் ரசிகர்கள் தினமும் டிவியில் ஒரிஜினலாக விஜய்யின் ஆட்சியை பார்த்து பூரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications