CM Vijay: ரஜினிகாந்தை சந்திப்பாரா முதலமைச்சர் விஜய்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் 17வது சட்டமன்ற முதலமைச்சராக விஜய் கடந்த ஞாயிறன்று பதவியேற்றுக் கொண்டார். பெரும் அரசியல் டிராமாவுக்கு மத்தியில் விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த தருணத்தை தமிழ்நாட்டில் பல மக்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களாக வைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். சாலைகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

திங்கட்கிழமையான நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். பின்னர், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் உள்ளிட்டோரையும் அவர்களுடைய வீடுகளுக்கே சென்று சந்தித்த காட்சிகள் வைரலாகின.

CM Vijay will meet Rajinikanth and Kamal Haasan requested by fans

அண்ணாவுக்கு பிறகு வெற்றிப் பெற்ற முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து நாகரீக அரசியலை நடத்தி வருகிறார் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தையும் விஜய் சந்திக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை தம்பி: அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என சினிமாவில் பாடி ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் விஜய். என்ன கை விளையாடுது கன்ல என போக்கிரி படத்தில் கேட்கும் போது கூட எத்தனை தலைவர் படம் பார்த்திருப்போம் என்றார். ரஜினிகாந்தின் தளபதி படத்தின் டைட்டிலையே தனது அடைமொழியாக மாற்றிக் கொண்டார். ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்கு இடையே ஏற்பட்ட பாக்ஸ் ஆபீஸ் மோதல் மற்றும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை தான் காக்கா - கழுகு பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்தது.

ரஜினிகாந்தை சந்திப்பாரா விஜய்?: தீயசக்தி என சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கிய விஜய் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ரோட்டுல அடிபட்டு சாவ என சீமான் எல்லை மீறி விஜய்யை விமர்சித்த சீமானையுமே விஜய் போய் சந்தித்து விட்டார். சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சண்டைப் போட்டு வரும் நிலையில், அதனை தடுக்கவாவது விஜய் - ரஜினிகாந்த் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், ஜன நாயகன் லீக் விவகாரம் மற்றும் தேர்தலில் அபார வெற்றிப் பெற்ற நிலையில், ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் காரணமாக கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று விஜய் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கின்றனர்.

கமல்ஹாசனையும் பார்க்கணும்: ரஜினிகாந்தை மட்டுமின்றி எம்பியாக உள்ள கமல்ஹாசனையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க வேண்டும் என்கின்றனர். இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டுக்கே சென்று விஜய் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்டிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனையும் விஜய் சந்திப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X