விஜய்யோட லீக்கான ஜனநாயகனே அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை காலி பண்ணிடுச்சு.. கருப்பு வசூலை முந்துமா?

சென்னை: அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அதிகப்படியாக 200 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டது. விஜய் நடித்த லியோ மற்றும் கோட் உள்ளிட்ட படங்கள் பெரிய வசூலை ஈட்டிய நிலையில், லீக்கான ஜன நாயகன் திரைப்படமும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே சூர்யாவின் கருப்பு படம் தான் 340 கோடி வசூலுடன் முன்னிலையில் உள்ளது. ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆகவில்லை என்றால் இந்நேரம் 4 நாட்களில் 400 கோடி வசூலை கடந்திருக்கும் என விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

CM Vijay s Jana Nayagan beats Ajith Kumar s last movie Good Bad Ugly Lifetime Box Office Collection

லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த நிலையில், இந்தளவுக்கு வசூல் ஈட்டியிருப்பது தளபதியின் ஸ்டார்டம்மை தான் காட்டுகிறது என்றும் அடுத்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிதாக படங்கள் வெளியாகாத நிலையில், கருப்பு வசூலையும் காவு வாங்கும் ஜன நாயகன் என விஜய் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், திங்கட்கிழமை டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Also Read
Jana Nayagan Day 4 Box Office: ஜன நாயகன் 4வது நாளில் எகிறிய வசூல்.. தங்கமே தளபதி பிளாஸ்ட்.. பிளாஸ்ட்
Jana Nayagan Day 4 Box Office: ஜன நாயகன் 4வது நாளில் எகிறிய வசூல்.. தங்கமே தளபதி பிளாஸ்ட்.. பிளாஸ்ட்

டிக்கெட் பிரஷர் இல்லை: விஜய் படங்கள் வந்தாலே அட்லீஸ்ட் முதல் 3 நாட்களுக்கு டிக்கெட் பிரஷர் இருக்கும். பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டப்படும். ஆனால், பாலையாவின் பகவந்த் கேசரி ரீமேக் மற்றும் மொத்த படமும் ஹெச்டி தரத்தில் 3 மாதங்களுக்கு முன்பே லீக்கான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் குடும்பத்துடன் படத்தை பார்த்து விட்டனர். மேலும், ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், குட்டி ரசிகர்கள் வராத நிலையிலும், ஜன நாயகன் படத்துக்கு முதல் நாளுக்குப் பிறகு 2வது நாளில் இருந்தே டிக்கெட் பிரஷர் பெரிதாக இல்லை.

Recommended For You
ஒரு நாள் ஜன நாயகன் பார்த்தா ஜோக்கரா?.. அப்போ வெற்றிமாறன்.. கொந்தளித்த சனம் ஷெட்டி.. என்ன ஆச்சு?
ஒரு நாள் ஜன நாயகன் பார்த்தா ஜோக்கரா?.. அப்போ வெற்றிமாறன்.. கொந்தளித்த சனம் ஷெட்டி.. என்ன ஆச்சு?

குட் பேட் அக்லி வசூலை முந்தியாச்சு: இந்த ஆண்டு ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக வெளியாக இருந்த பராசக்தி திரைப்படம் ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்காத நிலையில், வெளியாகாத நிலையில், அந்த படம் வெளியானது . படக்குழு 100 கோடி போஸ்டர் வெளியிட்டாலும் பராசக்தி படம் லாபகரமான படமாக அமையவில்லை என தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில் ஒப்புக்கொண்டார். மேலும், அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூலை ஜன நாயகன் திரைப்படம் 4 நாட்களில் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை உலகளவில் 217 கோடி ரூபாய் வசூலை முதலமைச்சர் விஜய் படம் எட்டியுள்ளது.

CM Vijay s Jana Nayagan beats Ajith Kumar s last movie Good Bad Ugly Lifetime Box Office Collection

முதலிடத்தில் கருப்பு: இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் ஜன நாயகன் திரைப்படம் 217 கோடி ரூபாய் வசூலுடன் இதுவரை 2வது இடத்தில் உள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் 340 கோடி ரூபாய் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது வார முடிவில் ஜன நாயகன் கருப்பு படத்தின் மொத்த வசூலை முந்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

திங்கட்கிழமை டிக்கெட் புக்கிங் எப்படி?: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, நரேன் மற்றும் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி, அமைச்சர்கள் என். ஆனந்த், ஸ்ரீநாத் மற்றும் அருண் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ஜன நாயகன் திரைப்படம் திங்கட்கிழமையான இன்றும் பல தியேட்டர்களில் ஆரஞ்சு அலை வீசி வருகிறது. இந்த வார இறுதியில் ஸ்பைடர்மேன் திரைப்படம் மட்டுமே ஜன நாயகன் வசூலுக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர். 400 கோடி பட்ஜெட்டில் வெளியான ஜன நாயகன் திரைப்படம் குறைந்த பட்சம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடி வசூலை ஈட்டினால் தான் நஷ்டத்தை தவிர்க்கும் என்கின்றனர். இதுவரை கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வசூல் அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X