King Kong: நடிகர் கிங் காங் மகளுக்கு வளைகாப்பு.. வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: நடிகர் கிங் காங் மகள் கீர்த்தனா மற்றும் நவீனுக்கு கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தும் அளவுக்கு இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது தனது மகளுக்கு கிங் காங் வளைகாப்பு நடத்தி உள்ளார். இதில் சின்னத்திரை , வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் கிங் காங்: ரஜினியுடன் அதிசய பிறவி படத்தில் நடித்தன் மூலம் கிங்காங் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து சுறா, போக்கிரி, வாத்தியார், கருப்பசாமி குத்தகைக்காரார், இந்திரலோகத்தில் நா அழகப்பன், முனியாண்டி விலங்கியல் ஆகிய படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கினார். இவர் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் என அரசியல் கட்சி தலைவர்களும், சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் என ஒரு நடிகரை விடாமல் வீடு தேடி சென்று பத்திரிக்கை கொடுத்து அழைத்து இருந்தார்.

King Kong Keerthana
Photo Credit:

மகளுக்கு திருமணம்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, மாலை சென்னை அசோக் பில்லர் இருக்கும் MPK மஹாலில் திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதே போல திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஷால், டி ராஜேந்தர், சிவகார்த்திகேயன், நாசர் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தடபுடலான வளைகாப்பு: தற்போது நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனா நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது மகளுக்கு வளைகாப்பு நடத்தி உள்ளார். அந்த வளைகாப்பில் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். அந்த போட்டோவை நடிகர் கிங்காங் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கிங்காங்கின் மகளுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் அழகான குழந்தை பிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X