சதீஷின் ‘நாய் சேகர்’ ஃபர்ஸ்ட் லுக் அவுட்… வடிவேலு ரசிகர்கள் ஷாக் !

சென்னை : நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் நாய்சேகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு நீண்டநாட்களுக்குப்பிறகு நாய் சேகர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சதீஷின் நாய் சேகர் போஸ்டர் வெளியாகி உள்ளது வடிவேலு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சதீஷ் ஹீரோவாக

சதீஷ் ஹீரோவாக

காமெடி நடிகராகப் பல்வேறு படங்களில் நடித்து வந்த சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இதனால், இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நாய்சேகர் ஃபர்ஸ்ட் லுக்

நாய்சேகர் ஃபர்ஸ்ட் லுக்

நாய்சேகர் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டார்கள். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி, உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள், படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு

நீண்ட நாட்களுக்கு பிறகு

நடிகர் வடிவேலு, நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு அண்மையில் திரும்ப பெறப்பட்டதை அடுத்து, இவர் சுராஜ் இயக்கத்தில் லக்கா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே காமெடி நடிகர் சதீசை வைத்து நாய் சேகர் என்ற படத்தை தயாரித்து வருவதாக கூறப்பட்டது.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

இதையடுத்து, வடிவேலு தரப்பினர் நாய் சேகர் டைட்டிலை விட்டுக் கொடுக்கும் படி ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் படம் பாதி அளவுக்கு முடிந்துவிட்டதாக கூறி பேச்சுவார்த்தையை தட்டிக்கழித்துள்ளனர். நாய் சேகர் டைட்டில் கிடைக்காததால் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

வடிவேலு ரசிகர்கள் ஷாக்

வடிவேலு ரசிகர்கள் ஷாக்

தற்போது வெளியாகி உள்ள சதீஷின் நாய் சேகர் டைட்டிலை பார்த்த வடிவேலுவின் ரசிகர்கள். இந்த டைட்டில் வடிவேலுவுக்குத்தான் பொருத்தமா இருக்கும் என்றும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டதாக கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X