அது நான் இல்லை…நம்பாதீங்க… வடிவேலு போட்ட குண்டு !
சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த 4 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. தற்போது நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
வடிவேலு நேற்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் வடிவேலு புதிய படம் குறித்து சென்னை தியாகராயநகரில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

படங்களில் நடிக்கவில்லை
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு அவர்கள் மறுத்ததால் இயக்குநர் ஷங்கருடனான மோதல்போக்கு, கால்ஷீட் பிரச்சனை போன்றவற்றின் பேரில் வடிவேலுவை புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

தடை நீங்கியது
சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் நன்றி
புதிய படம் குறித்து சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்துள்ளது. திரையுலகத்தில் இருந்தும் எனக்கு வாழ்த்துகள் வந்துள்ளது அதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

எனர்ஜி இருக்கிறது
இந்த பிறந்த நாள் புதிதாக பிறந்தது போல் இருக்கிறது. இந்த நாள் மிகவும் மன மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா நேரத்தில் மக்களின் கஷ்டங்களை ஒப்பிடும்போது தன் கஷ்டம் மிகவும் சாதாரணம் என்றும், இன்னும் வித்தியாசமான கெட்டப்களை போட்டு மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றும், இன்னும் சூனா பானா கேரக்டர் போன்ற எனர்ஜி இருப்பதாக பேசினார்.

நான் இல்லை
இதையடுத்து, பேசிய வடிவேலு, ட்விட்டர், பேஸ் புக் போன்ற எந்த சமூக வலைதளத்திலும் தான் இல்லை. அப்படி போலியாக இருக்கும் எதையும் நம்பவேண்டாம் என்றும் வடிவேலு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











