விஜய்சேதுபதி பெயரில் அட்மின் செய்யும் அட்ராசிட்டிகள்.. சொந்தப் படத்துக்கே நோ புரொமோஷன்!

விஜய் சேதுபதி டிவிட்டர் அட்மின்கள் அவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Complaints against Vijay Sethupathy's twitter admin | புகாருக்கு உள்ளன விஜய்சேதுபதி அட்மின்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் டிவிட்டர் அட்மின்கள், அவருடைய நற்பெயரை கெடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

பிஸியாக இருக்கும் நடிகர்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப்பக்கங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்களை அட்மினாக வைத்து தான் இயக்குகிறார்கள். ஒரு சில அட்மின்கள், சம்மந்தப்பட்ட நடிகர்களை தங்களுடைய சுயலாபத்துக்காக பயன்படுத்திவிடுகிறார்கள்.

அப்படித்தான் நடிகர் விஜய் சேதுபதியின் டிவிட்டர் அட்மின், தன்னுடைய சொந்த லாபத்திற்காக அதை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் டிவிட்டர் கணக்கை கையாள்வது ஒரு ஆன்லைன் சினிமா விளம்பர நிறுவனம். அதன் உரிமையாளர் விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமானவராம்.

சூப்பர் மார்க்கெட்டிங்

சூப்பர் மார்க்கெட்டிங்

"உங்கள் படங்களின் புரொமோஷன்களை எங்களுக்கு தந்தால், விஜய் சேதுபதியை வைத்து பாடல்கள், டிரெய்லர்கள் போன்றவற்றை ரிலீஸ் செய்ய வைக்கிறோம்" என வாக்குறுதி அளித்து ஆர்டர்களை பெறுகிறார்களாம் அவர்கள். அதில் ஒன்றில் பெரிய தவறில்லை என்பதால் சேதுவும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

அட்மினின் கண்டிசன்

அட்மினின் கண்டிசன்

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், விஜய் சேதுபதியின் படங்கள் பற்றி டிவீட் செய்வதற்கே, தங்களிடம் தான் ஆன்லைன் புரொமோஷனை கொடுக்க வேண்டும் என அவர்கள் நிர்பந்திருக்கிறார்களாம். ஒருவேளை அவர்களுக்கு அந்த ஆர்டர் கிடைக்கவில்லை என்றால், விஜய் சேதுபதி நடித்த படமாகவே இருந்தாலும், அந்த படங்கள் பற்றி டிவீட் செய்வதில்லையாம்.

சங்கத்தமிழனுக்கு நேர்ந்த கதி

சங்கத்தமிழனுக்கு நேர்ந்த கதி

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் சங்கத்தமிழன். இப்படம் விஜயா புரொடக்ஷன்ஸ் கையில் இருந்த வரை விஜய் சேதுபதியின் டிவிட்டர் கணக்கில் இருந்து தினம் அப்டேட்கள் கீச்சப்பட்டன. ஆனால் படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் சென்ற பிறகு அந்த படத்தை பற்றி ஒரு டிவீட் கூட செய்யவில்லை.

விநியோகஸ்தர் தரப்பு அப்செட்

விநியோகஸ்தர் தரப்பு அப்செட்

விநியோகஸ்தர் தரப்பில் இருந்து விஜய் சேதுபதியிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டப்பிறகு ஒரே ஒரு பாடல் மட்டும் அவரது டிவிட்டர் மூலம் வெளியிடப்பட்டதாம். இதனால் விநியோகஸ்தர் தரப்பு செம அப்செட்டாம்.

நற்பெயருக்கு கலங்கம்

நற்பெயருக்கு கலங்கம்

சம்மந்தமே இல்லாம் விஜய் சேதுபதியின் நற்பெயரை இப்படி கெடுக்கிறார்களே என விளம்பர கம்பெனி மீது கோலிவுட் முக்கியஸ்தர்கள் பலர் கடுப்பில் இருக்கிறார்களாம். சம்மந்தப்பட்ட நபர்கள் மீது விஜய் சேதுபதி நடவடிக்கை எடுப்பாரா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சம்பள பாக்கி

சம்பள பாக்கி

இது ஒருபுறம் இருக்க விஜய் சேதுபதிக்கு விஜயா புரொடக்ஷன்ஸ் சம்பள பாக்கி வைத்திருப்பதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கத்தமிழன் பட விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X