சிம்புவை தானாக தேடி வந்துள்ள வம்பு: என்ன நடக்கப் போகுதோ?

By Siva

சென்னை: சிம்பு சமத்துப் பிள்ளையாக இருந்தாலும் அவரை தேடி வருகிறது வம்பு.

சிம்பு என்றால் வம்பு என்ற பெயர் மாறி அவர் நல்ல பிள்ளையாக இருக்கிறார். காவிரி விவகாரத்தில் அவர் செய்த காரியம் மக்களை பெரிதும் கவர்ந்தது. அடடே, சிம்பு என்ன கருத்தா பேசுகிறார், நடக்கிறார் என்று மக்கள் கூறினார்கள்.

இப்படி நல்ல பிள்ளையாக இருந்த சிம்புவின் பெயர் 90 எம்.எல். படத்தால் கெட்டுப் போயுள்ளது.

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே போஸ்டர்களால் அந்த படம் வம்பில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சிம்பு அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

வம்பு

வம்பு

சும்மாவே சிம்புன்னா வம்பை எதிர்பார்க்கும் ஆட்களுக்கு இந்த படம் தொக்காக அமைந்துவிட்டது. 90 எம்.எல். படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்து சிறிது நேரத்தில் இரண்டு முறை ஓவியாவுடன் லிப் டூ லிப் காட்சியில் நடித்துவிட்டார் சிம்பு. இந்த படத்தில் என்ன கூத்து நடக்கப் போகிறதோ? என்று அதற்குள் பேசத் துவங்கிவிட்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நல்லா இருந்த சிம்புவை 90 எம்.எல். படத்தில் இப்படி நடிக்க வைத்து அவரின் இமேஜை டேமேஜாக்கிவிட்டார்களே என்று சிலர் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வம்பு தயாராகிவிட்டது.

தொழில்

தொழில்

சிம்பு ஒன்றும் வம்பை எதிர்பார்த்து மஹா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். ஹன்சிகா முன்னாள் காதலியாக இருந்தாலும் அவர் மீது சிம்புவுக்கு வருத்தம் இல்லை. அந்த நல்ல எண்ணத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பார். அதற்குள் வம்பு, தும்புன்னு பேச்சு கிளம்பிடுச்சே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X