அடிபொலி.. கும்கி இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி அஸ்வின்.. ஹீரோவாக 2வது படம்!

சென்னை: நாம எப்போ ஹீரோவாக மாறுவோம் என்கிற பெரிய கனவோடு தொடர்ந்து முயற்சி செய்து வந்த குக் வித் கோமாளி அஸ்வின் அடுத்தடுத்து இரு படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அசத்தி வருகிறார்.

Recommended Video

Ashwin படத்தில் நடிக்கும் Avantika Mishra யார்? | Enna Solla Pogirai, Shades of Kadhal

என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் அடுத்ததாக இயக்குநர் பிரபு சாலமன் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#Ashwinkumar02 எனும் ஹாஷ்டேக்கை அஸ்வின் ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி பிரபலம்

குக் வித் கோமாளி பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். அந்த நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அந்த நிகழ்ச்சியின் பக்கம் திருப்பியது.

ஹீரோ ஆகணும்

ஹீரோ ஆகணும்

சினிமாவுக்கு ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆசையுடன் தான் நடிகர் அஸ்வின் நுழைந்தார். ஆனால், அவருக்கு கிடைத்தது எல்லாம் அண்ணன், நண்பன் போன்ற கதாபாத்திரங்கள் தான். இதனால், கடும் அப்செட் ஆன அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல பாதையை அமைத்துக் கொடுக்க தனது திறமையால் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின்.

வேற லெவல் ஹிட்

வேற லெவல் ஹிட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் வீடியோ ஆல்பம் பாடலான குட்டி பட்டாஸ் பாடலில் நடனமாடி அசத்த அந்த பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. அப்படியே சினிமா பாடல் போலவே அந்த பாடல் இருந்த நிலையில், நடிகர் அஸ்வினுக்கு ஹீரோ வாய்ப்புகள் தேடி வருகின்றன.

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக அஸ்வின் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்குமாரோ வீடியோ பாடலில் நடனமாடிய தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா என இரு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

பிரபு சாலமன் இயக்கத்தில்

பிரபு சாலமன் இயக்கத்தில்

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக மைனா, கும்கி, காடன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அஸ்வின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்போ ஆரம்பம்

எப்போ ஆரம்பம்

ஏற்கனவே இயக்குநர் பிரபுசாலமன் தனது அடுத்த படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தும் முடித்து விட்ட நிலையில், வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் பூஜை போட்டு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் படத்தில் எந்தவொரு சிஜி காட்சியும் இடம்பெறாமல் இயற்கை அழகோடு படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியளவில் டிரெண்டிங்

இந்தியளவில் டிரெண்டிங்

அஸ்வினின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியான நிலையில், அஸ்வின் ரசிகர்கள் #Ashwinkumar02 எனும் ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், அஸ்வினின் நல்ல மனசுக்கு நிறைய படங்களில் அவர் ஹீரோவாக நடித்து அசத்துவார் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X