டிடிஎஃப் வாசனுக்கு கெட்டவுட்டு.. கூல் சுரேஷுக்கு இன்னாம்மா ஒரு கட்டவுட்டு.. மஞ்சள் வீரன் போஸ்டர்!
சென்னை: பைக் ரேஸ் வீடியோக்களை யூடியூபில் போட்டு ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சீன் காட்டி டிரெண்டானவர் தான் டிடிஎஃப் வாசன். விஜய் ரேஞ்சுக்கு அவர் போட்ட பில்டப்புகளும் காவல் துறைக்கு எதிராக பேசிய வீடியோக்களும் அவருக்கு எதிராக திரும்பின.
பைக் ஓட்டிக் கொண்டே விழுந்து அடிபட்டு மாவுக்கட்டுப் போட்ட நிலையில், அதற்காக சிறைக்கு செல்லும் அளவுக்கு மிகப்பெரிய சிக்கலில் சிக்கினார். சினிமாவில் ஹீரோவாகி விட்டால் நாமும் பெரிய செலிபிரிட்டியாகி விடலாம் எந்த சிக்கலும் வராது என நினைத்து மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்தார்.

இயக்குநர் செல்அம் இயக்கத்தில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், அந்த படத்தில் இருந்து அதிரடியாக டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டு தற்போது புதிய ஹீரோவாக கூல் சுரேஷ் இணைந்துள்ளார். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளையுடன் கூல் சுரேஷ் இருக்கும் மஞ்சள் வீரன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஹீரோவையே மாத்திட்டாங்க: மகா நடிகன் படத்தில் சத்யராஜ் எப்படி ரமேஷ் கண்ணாவை கழட்டி விட்டு அந்த படத்தில் ஹீரோவாக மாறுவாரோ அதே போல ஏகப்பட்ட நடிகர்கள் சினிமாவில் ஹீரோ வாய்ப்புகளை பிடித்திருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். மஞ்சள் வீரன் படத்தில் சைடு ரோலில் நடிக்க வந்த கூல் சுரேஷ் தற்போது டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் ஹீரோவாக மாறியுள்ளார்.

கூல் சுரேஷ் வெடிக்கும் மஞ்சள் வீரன்: கூல் சுரேஷ் நடிக்கும் மஞ்சள் வீரன் இல்லை. இது கூல் சுரேஷ் வெடிக்கும் மஞ்சள் வீரன் என தனது படத்துக்கு வேறலெவலில் பன்ச் பேசி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். காளை மாட்டை எல்லாம் போஸ்டரில் வைத்துக் கொண்டு செம மாஸாக கூல் சுரேஷ் போஸ் கொடுத்துள்ள நிலையில், பொங்கலுக்கே படம் வந்து விடுமா? என்றெல்லாம் கேள்விகள் கிளம்பியுள்ளன.
பிக் பாஸ் தந்த யோகம்: காதல் அழிவதில்லை, திருடா திருடி காலத்தில் இருந்தே சிம்பு மற்றும் தனுஷுக்கு நண்பனாக நடித்து வந்த கூல் சுரேஷ் பல வருடங்கள் ஆகியும் இன்னமும் ஹீரோ நண்பனாகவே நடித்து வருகிறாரே என விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை என வருத்தப்பட்ட அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த சீசனில் சென்று வந்த நிலையில், தற்போது ஹீரோவாகவே மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











