கூலி படம் தோல்விதான்.. ஆனாலும் செம சாதனை.. ரஜினினா சும்மாவா பாஸ்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், ரச்சிதா ராம் என பலர் நடித்த கூலி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்வி என்பது மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த பவர் ஹவுஸ் பாடல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. அதை பார்த்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். அவரது இயக்கத்தில் எப்படியாவது ஒரு சீனிலாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசைப்பட்டதுண்டு. அவ்வளவு ஏன்? இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்கூட அப்படி ஆசைப்பட்டுதான் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Coolie Power House Song Hits 100 Million Views Rajinikanth Lokesh Kanagaraj Film Trends Despite Failure
Photo Credit:

சூப்பர் ஸ்டாருக்கும் வந்த ஆசை: அதேபோன்ற ஆசைதான் ரஜினிகாந்த்துக்கும் வந்தது. ஏற்கனவே தன்னுடைய நண்பர் கமல்ஹாசனை வைத்து லோகி இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால்; நமக்கும் அப்படி ஒரு ஹிட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் கூலி கூட்டணியை அமைத்தார். இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சார்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.

பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸ்: ரஜினியை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே நிச்சயம் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெறும் என பலரும் கூறினார்கள். ஏகப்பட்ட ஹைப்புகள் படத்தை சுற்றி எழுப்பப்பட்டன. கமலுக்கு கொடுத்த வெற்றியை விடவும் அதிகமாக ரஜினிக்கு கொடுப்பார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்களது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வைத்தார்கள்.

ஏமாற்றிய படம்: அவ்வளவு எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை; படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் என அடுக்கடுக்காக மைனஸை கூறினார்கள். ரசிகர்களை கவர தவறிவிட்டதால் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வியை தாண்டி கடுமையான ட்ரோலை சந்தித்தது. முக்கியமாக லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டையே இந்த தோல்வி அசைத்து பார்த்துவிட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பவர் ஹவுஸ் செய்த சாதனை: அனைவருமே லோகேஷை ஓவராகவே ட்ரோல் செய்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்தப் படத்தின் தோல்வியை அவர்கள் இரண்டு பேருமே மறக்கமாட்டார்கள். சூழல் இப்படி இருக்க கூலி கொடுத்த காயத்துக்கு மருந்திடும் வகையில் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது படத்தில் இடம்பெற்றிருந்த பவர் ஹவுஸ் பாடல் 100 மில்லியன் (பத்து கோடி) பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X