கபாலி, ஜெயிலர் எல்லாம் ஓரம்போங்க.. இங்கிலாந்து, சிங்கப்பூர் என களைகட்டும் கூலி ப்ரோமோஷன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர் ஓனர்களுக்கு எல்லாம் தீபாவளி கொண்டாட்டம் போலத்தான். கடந்த 7 மாதங்களாக அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியான நிலையிலும், இண்டஸ்ட்ரி ஹிட்டை ஒரு படம் கூட கொடுக்கவில்லை.

இந்நிலையில், கண்டிப்பாக கூலி திரைப்படம் பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகளவில் தியேட்டர் ஓனர்கள் குஷியாக உள்ளனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து என இப்போதே ப்ரோமோஷன்கள் களைகட்டி வருகின்றன.

Coolie promotions peak at Overseas like UK and Singapore makes Rajinikanth fans happy
Photo Credit:

அவற்றின் வீடியோக்களை அந்த ஊர் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி சுமார் 100 நாடுகளில் கூலி படம் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

53 நாடுகளில் டிரெண்டிங்: இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், மலேசியா மட்டுமின்றி கூலி படத்தின் டிரைலர் 53 நாடுகளில் டிரெண்டாகி வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டில் உருவாகியுள்ள ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் வார் 2 படத்துக்கு கூட இந்த ஹைப் இல்லை என்கின்றனர்.

சிங்கப்பூர் உணவு விடுதியில்: ரஜினிகாந்த் படங்கள் வெளியானாலே தியேட்டர்களில் மட்டுமின்றி பிரத்யேக காட்சியை ஹோட்டல்களில் கூட சிலர் திரையிடுவார்கள். மேலும், பல உணவகங்களில் சாப்பிடும் பில்லை பொறுத்து டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்படும். சிங்கப்பூரில் ஒரு உணவகத்தின் வாயிலில் கூலி படத்தின் கட் அவுட்கள் வைக்கப்பட்டு அலங்காரமே சும்மா அதிருதா என்கிற மோடுக்கு உள்ளது.

இங்கிலாந்தில் கூலி ஃபீவர்: கபாலி, ஜெயிலர் படங்களை விட கூலி படத்துக்கான ப்ரோமோஷன் ஓவர்சீஸில் களைகட்டி வருகிறது. இங்கிலாந்தில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டு கூலி படத்தின் டிரைலர், மோனிகா பாடல்களை எல்லாம் சாலையில் ஒளிபரப்ப, அங்கே உள்ள வெளிநாட்டு ரசிகர்களும் ஆடிப்பாடி ரஜினிகாந்த் படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமா?: கூலி திரைப்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்றும் டைம் டிராவல் படம் என்றும் ஏகப்பட்ட கதைகளை நெட்டிசன்கள் கிளப்பி விட்டு வருகின்றனர். ஆனால், இதுவொரு சமூக பொறுப்புள்ள ரிவெஞ்ச் டிராமாவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X