twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனாவா.. சாந்தனு அதிர்ச்சி

    |

    சென்னை : நடிகர் சாந்தனு நேற்று கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை கண்டு அதிர்ச்சியுடன் தன் கருத்தை ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார் .

    தமிழகத்தில் ஊரடங்கு கடந்த 35நாட்களாக பின்பற்ற பட்டு வருகிறது.இடையில் இரண்டாவது ஊரடங்கு அறிவித்த சில நாட்களில் கொரோனா தொற்று சற்று பரவும் எண்ணிக்கை தொய்வடைந்தது இதன் பின் கூடிய விரைவில் ஊரடங்கு தளர்த்த படும் என மக்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக மீண்டும் தமிழகத்தில் தொற்று பரவும் எண்ணிக்கை வீரியம் அடைந்தது இதனால் அரசுக்கு வேறு வழியில்லாமல் இதை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அறிவிக்கபட்டது.

     coronavirus, shanthatnu, actor shanthanu, chennai coronavirus

    தேர்ந்தெடுக்க பட்ட தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் மாவட்டங்களான சென்னை,கோவை மற்றும் மதுரை ஆகியவற்றில் நான்கு நாட்களும் திருப்பூர் மற்றும் சேலத்தில் மூன்று நாட்களும் முழு ஊரடங்கு அறிவிக்கபட்டது . முழு ஊரடங்கு அறிவித்த பின் அடிப்படை தேவையான உணவு மற்றும் சில அடிப்படை பொருட்களின் தேவைக்காக மக்கள் பலரும் வீதிக்கு வந்து அனைத்து பொருட்களையும் 25ஆம் தேதி வாங்கினர் .இதனால் பல இடங்களில் சமூக விலகளும் உடைக்கபட்டதை காண முடிந்தது .

    மும்பையில் இர்ஃபான் கானின் உடல் அடக்கம்.. லாக்டவுனால் 20 பேர் மட்டுமே பங்கேற்பு.. ரசிகர்கள் கதறல்!மும்பையில் இர்ஃபான் கானின் உடல் அடக்கம்.. லாக்டவுனால் 20 பேர் மட்டுமே பங்கேற்பு.. ரசிகர்கள் கதறல்!

    இதன் பிறகு கொரோனா தொற்று குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று தமிழகத்தில் மட்டும் 121பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது .இதில் சென்னையில் மட்டும் 103பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது . இதை பற்றிய தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சாந்தனு. முழு ஊரடங்கு அறிவிக்கபட்டது நல்ல விஷயம் தான் ஆனால் கோயம்பேடு மார்கெட் திறந்து வைக்கப்பட்டது சரியான நடவடிக்கை கிடையாது.

    ஒரே நாளில் சென்னையில் மட்டும் 103பேருக்கு கொரோனா அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். மக்களுக்கு எந்த விதத்திலும் அடிப்படை தேவையான உணவு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் அரசு கோயம்பேடு மார்க்கெட்டை சில கட்டுபாட்டுகளின் கீழ் நடத்தி வந்தது ஆனால் நேற்று கோயம்பேடு தொழிலாளர்கள் 5பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது மொத்த சென்னையையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

     coronavirus, shanthatnu, actor shanthanu, chennai coronavirus

    இதனை சுட்டிகாட்டி தான் நடிகர் சாந்தனு தற்போது தன் கருத்தை ட்விட்டரின் வாயிலாக கூறியிருக்கிறார் .லாக்டவுனுக்கு பிறகு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தன் கருத்தை பதிவிட்டு வரும் சாந்தனு தற்போதும் தன் கருத்தை பதிவிட்டு உள்ளார் . சாந்தனுவின் கருத்து சரியானதா அல்லது தவறானதா என்பதை ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

     coronavirus, shanthatnu, actor shanthanu, chennai coronavirus

    இதில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தவறு இல்லை ஆனால் அங்கு ஏற்பட்ட சில தவறுகள் பெரிய இடத்தை நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்பதே பலரின் கருத்து .இதனால் வரும் நாட்களில் அனைத்து இடங்களிலும் சமூக விளைவுகளை அதிகபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது .

    English summary
    Actor Shanthanu is worried over the coronavirus in Chennai city.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X