Vijay - தயிர் சாதம் இருந்தால் போதும் விஜய்யை மேனேஜ் செய்திடலாம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்ட பாருங்க
சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பவதாரிணியின் உயிரிழப்பால் தடைப்பட்ட ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. விஜய் கடைசியாக நடித்த லியோ விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே அதனை இதில் சரிக்கட்டுவதற்கு விஜய் கடுமையாக உழைத்துவருகிறார். இந்தச் சூழலில் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

லியோ வசூல்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த மூன்று படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி: இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதிதான் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறினர். இதனையொட்டி ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பஞ்சாயத்தும் ஆரம்பித்தது. ஆனால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். அதேபோல் ரஜினிகாந்த்தும் அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
GOAT: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். மும்முரமாக தொடங்கிய ஷூட்டிங் பவதாரிணியின் உயிரிழப்பால் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தாரோ அதேபோல் வெங்கட் பிரபு விஜய்க்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்: சூழல் இப்படி இருக்க அரசியலுக்கு விஜய் வருவார் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்திருந்த நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். அரசியலுக்கு வந்திருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார் அவர்.
டயட் கன்ட்ரோல்: விஜய்யை பார்க்கும் பலரும் ஆச்சரியப்படும் விஷயங்களில் ஒன்று, அவரது உடலமைப்பை. விஜய்க்கு மட்டும் வயது ஏறுகிறதா இல்லை குறைகிறதா என்று பலரும் கேட்பார்கள். இந்நிலையில் பைரவா படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, சமீபத்தில் அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த்கூட நிறைய வெரைட்டியான உணவுகளை சாப்பிடும்போது எடுத்துக்கொள்வார். ஆனால் விஜய் அப்படி இல்லை. உணவில் ரொம்பவே கான்ஷியஸாக இருப்பார். மதிய சாப்பாட்டுக்கு அவருக்கு தயிர் சாதமும், 5 சிக்கன் பீஸ்களும் இருந்தால் போதும். அதை வைத்து அவரை மேனேஜ் செய்திடலாம். ஆனால் தினமும் அப்படி சாப்பிடுவதை பார்த்தால் ஆச்சரியம் வரும்" என்றார்.


Click it and Unblock the Notifications











