இவரு நயனுக்கு அப்பாவா... இல்ல எனக்கு அண்ணனா?: சத்யராஜை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஆர்யா

சென்னை: ஆர்யா- நயன்தாரா கெமிஸ்ட்ரியில் தயாராகி வரும் படம் 'ராஜா ராணி'. இப்படத்தில் நயனின் அப்பாவாக நடித்து வருகிறார் சத்யராஜ்.

மேலும் படத்தில் ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் மற்றும் சத்யன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ராஜா ராணி படத்தின் இயக்குநரான அட்லி கதை சொன்ன விதத்தைப் பார்த்தே அசந்து போனாராம் ஆர்யா. மேலும், சத்யராஜின் இளமையான நடிப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனாராம்.

இது குறித்து ஆர்யா, தனியார் தொலைக்காட்சியின் சுதந்திர தினச் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது....

காபி வித் ஸ்டோரி...

காபி வித் ஸ்டோரி...

சிலர் கதை சொல்வதைக் கேட்டாலே ஓடி விடத் தோன்றும். அப்படிப்பட்டவர்களிடம் சிக்கினால், அவர்களுக்கு ஒரு கப் காபி ஆர்டர் செய்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன் நான்.

அட்லி சூப்பர்....

அட்லி சூப்பர்....

ராஜா ராணி கதையை அட்லி தெளிவாகவும், புத்திசாலித்தனமாகவும் கூறினார். எனக்கு அவர் கதை சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது.

அப்பாவா... அண்ணனா..?

அப்பாவா... அண்ணனா..?

இப்படத்தில் சத்யராஜ் மிகவும் ஸ்டைலான அப்பாவாக நடித்துள்ளார். சில காட்சிகளைப் பார்க்கும் போது இவர் நயனுக்கு அப்பாவாக நடிக்கிறாரா இல்லை எனக்கு அண்ணனா என சந்தேகம் வந்து விட்டது எனக்கு' எனச் சிரித்துக் கொண்டே சொல்கிறார் ஆர்யா.

செப்டம்பர் ரிலீஸ்...

செப்டம்பர் ரிலீஸ்...

ராஜாராணி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு வரும் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 27ம் தேதி ‘ராஜா ராணி'யின் கெமிஸ்ட்ரியை தியேட்டரில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X