twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்மனுக்கு ஆஜராகாத விஷால்...ரூ.500 அபராதம் விதித்து அதிரடி காட்டிய கோர்ட்

    |

    சென்னை : ஜிஎஸ்டி தொடர்பான வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்ததால் நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்து எழும்பூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஜிஎஸ்டி செலுத்தாத விவகாரத்தில் விஷாலுக்கு எதிராக கோர்ட் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

    ராதே ஷ்யாம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படாது... உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்கள்ராதே ஷ்யாம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படாது... உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்கள்

    விஷால் மீது என்ன வழக்கு

    விஷால் மீது என்ன வழக்கு

    2016 ம் ஆண்டு விஷால் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1 கோடி வரை அவர் வரி செலுத்தாமல் இருந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் சென்னை மண்டல ஜிஎஸ்டி பிரிவு, விஷாலின் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட் நடிகர் விஷாலை கண்டித்தது.

    சம்மனுக்கு ஆஜராகாத விஷால்

    சம்மனுக்கு ஆஜராகாத விஷால்

    இந்த வழக்கு தொடர்பாக விஷால் நேரில் ஆஜராக 2016 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி சென்னை மண்டல பிரிவால் கிட்டதட்ட 10 முதல் விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விஷால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது பற்றி ஜிஎஸ்டி பிரிவு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. அதில், விஷால் விசாரணைக்கு ஆஜராகாததுடன் விசாரணையை தாமதப்படுத்தி, வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் நடந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    கோர்ட் உத்தரவையும் மதிக்கனும்

    கோர்ட் உத்தரவையும் மதிக்கனும்

    இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட், விஷாலை கண்டித்ததுடன் ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர் வேலைகளில் பிஸியாக இருப்பது உண்மையாக இருக்கலாம். அதே சமயத்தில் கோர்ட் நடவடிக்கைகளின் கீழ் அதிகாரிகளால் அனுப்பப்படும் சம்மனுக்கும் மதிப்பளித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொறுப்பும் உள்ளது.

    Recommended Video

    Fitness ரொம்ப ரொம்ப முக்கியம்' - Arun Vijay | Vishnu Vishal | Shivani | Tamil Filmibeat
    வேண்டுமென்றே தாமதப்படுத்தினார்

    வேண்டுமென்றே தாமதப்படுத்தினார்

    ஆனால் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராக அவர் முயற்சிக்கவில்லை. இது வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது எனக் கூறி விஷாலுக்கு கோர்ட் கண்டனமும் தெரிவித்துள்ளது.

    English summary
    Chennai Egmore court has fined actor Vishal Rs 500 crore for failing to appear for several summons in a GST-related case. Court warned Vishal for non cooperation in the matter of investigations and summon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X