twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்!

    |

    மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி நிதியளித்த அக்‌ஷய் குமார், மேலும் 3 கோடி நிதியளிக்க முன் வந்துள்ளார்.

    Recommended Video

    Breaking! Raghava Lawrence again proved his humanity | Chandramuki 2

    பாலிவுட்டில் கான் நடிகர்களுக்கு சரியான போட்டியாக அக்‌ஷய் குமார், சமீப காலமாக பல பிளாக்பஸ்டர் படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார்.

    தமிழில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

    செக்ஸ்போஸிங் தேவையில்லை.. உங்களை கொல்ல இதுவே போதும்.. டபுள் மீனிங்கில் கேப்ஷனுடன் சூடேற்றும் நடிகை!செக்ஸ்போஸிங் தேவையில்லை.. உங்களை கொல்ல இதுவே போதும்.. டபுள் மீனிங்கில் கேப்ஷனுடன் சூடேற்றும் நடிகை!

    25 கோடி நிதி

    25 கோடி நிதி

    இந்தியாவிலேயே கொரோனா நிவாரண நிதிக்காக டோலிவுட் நடிகர்களான பவன் கல்யாண், பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் பல கோடி ரூபாய்களை அளித்து வந்த நிலையில், இந்த நேரத்தில் மக்களுக்கு உதவுவது நம்முடைய கடமை என்பதை உணர்ந்த அக்‌ஷய் குமார் அதிகபட்சமாக 25 கோடி நிதியை PM Careக்கு வழங்கி உள்ளார்.

    மேலும் 3 கோடி

    மேலும் 3 கோடி

    ஏற்கனவே இந்திய நடிகர்கள் யாரும் கொடுக்காத அளவுக்கு 25 கோடி நிதியை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக கொடுத்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார், தற்போது மும்பை மாநகராட்சிக்கு 3 கோடி நிதியை கொடுக்க முன்வந்துள்ளார். PPE, மாஸ்க்குகள், கொரோனா டெஸ்ட் உபகரணங்கள் வாங்க இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

    கான் நடிகர்கள்

    கான் நடிகர்கள்

    அக்‌ஷய் குமாரை போலவே பாலிவுட்டில் கான் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களும், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகளும் தங்களால் முயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பங்கும் அளப்பறியது.

    100 கோடி சம்பளம்

    100 கோடி சம்பளம்

    அக்‌ஷய் குமாரின் சூர்யவன்ஷி திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டு இருக்கிறது. மேலும், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிக்கும் அட்ரங்கி ரே படத்திற்கு அக்‌ஷய் குமாருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பெரிய மனசு

    பெரிய மனசு

    எவ்வளவு தான் சம்பாதித்தாலும், கொரோனா போன்ற உலகையே உலுக்கக் கூடிய பேரிடர் காலத்தில், அரசுக்கும் மக்களுக்கும் உதவும் நோக்கில், 28 கோடி ரூபாயை கொடுக்க முன் வந்திருக்கும், அக்‌ஷய் குமாரின் பெரிய மனசை பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Akshay Kumar donates Rs 3 crore to BMC to assist in making of PPE, masks and rapid testing kits. Before he gave Rs 25 crore to PM Care.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X