தோனி சார் இதை நம்பமாட்டீங்க.. 25 கிமீ தள்ளியும்.. எக்கச்சக்கமாக புகழ்ந்த சிவகார்த்திகேயன்
சென்னை: சர்வதேச ஆண்களுக்கான டி20 போட்டி சமீபத்தில்தான் முடிந்தது. அதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை தட்டி சென்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் நடக்கவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் Roar 26 என்ற பெயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
சர்வதேச ஆண்கள் டி20 உலகக்கோப்பை முடிந்த சில வாரங்களிலேயே ஐபிஎல் போட்டி தொடங்கவிருக்கிறது. வழக்கமான அணிகள் இந்த சீசனிலும் மோதுகின்றன. கடந்த சீசனில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடுகிறது. கடந்த முறை பத்தாவது இடத்தில் முடித்த சிஎஸ்கே இந்த முறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. முக்கியமாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இந்த முறை சென்னை அணிக்காக களமிறங்குகிறார்.

Roar 26 விழா: 28ஆம் தேதியிலிருந்து ஐபிஎல் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் Roar 26 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. சென்னை அணியின் முன்னாள் வீரர்களுக்கிடையே போட்டி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி, சிவகார்த்திகேயனின் வாழ்த்து மழை என களைகட்டியது நிகழ்ச்சி. ஏராளமான ரசிகர்கள் நேற்று மைதானத்தில் குழுமினார்கள். ரஹ்மான் சில பாடல்களை பாடி ரசிகர்களையும், வீரர்களையும் மகிழ்வித்தார்.
சிவகார்த்திகேயனின் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "உங்களை இதுவரை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன் தோனி. சேப்பாக்கத்தின் அத்தனை ஸ்டாண்ட்களில் இருந்தும் உங்களை பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன். முதல்முறையாக உங்களை இவ்வளவு பக்கத்தில் இருந்து பார்க்கிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை போல்தான் எனக்கும் உங்கலை பிடிக்கும். உங்களது கேப்டன்சி அத்தனை அபாரமானதாக இருக்கும் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
25 கிமீ தள்ளி: வெற்றி, தோல்வியை கடந்து ரசிகர்கள் இந்த அணியை ஆதரிப்பதால்தான் இதை ஒரு குடும்பம் என்று சொல்கிறோம். சிஎஸ்கே எப்போதுமே ஒரு எமோஷன்தான். அதனால்தான் மைதானத்துக்குள் தோனி வரும்போது அத்தனை ஆர்ப்பரிப்பு. தோனி நீங்கள் நம்பமாட்டீர்கள். நான் இங்கிருந்து 25 கிமீ தள்ளி ஈசிஆர் என்ற ஏரியாவில் இருக்கிறேன். நீங்கள் மைதானத்துக்குள் வரும்போது அங்கு வரைக்கும் உங்களுக்கான ஆரப்பரிப்பு கேட்கிறது" என்றார். எஸ்கே இப்படி பேசப்பேச மைதானமே அதிர்ந்தது.
கலந்துரையாடல்: அதுமட்டுமின்றி தோனியுடன் கலந்துரையடிய சிவகார்த்திகேயன், "உங்களிடம் ஓய்வு குறித்து ஒருமுறை கேட்டபோது டெஃபனட்லி நாட் என கூறினீர்கள். ஒவ்வொரு சீசனிலும் அதையே சொல்ல வேண்டும் என கூறினார். அதற்கு தோனியோ கூலாக, அது ரொம்ப கடினம் என சொல்ல; விடாத சிவா, 'நீங்கள் 60 வயது வரை விளையாட வேண்டும் என அடுத்த ஆசையை முன்வைத்தார். அதற்கு கூலாக பதில் சொன்ன தோனி, 'என்னுடைய ஃபிட்னஸ் நாளுக்கு நாள் குறைகிறது என கூற; நீங்கள் ஃபிட்தான் என எஸ்கே நம்பிக்கை கொடுக்க; நிச்சயம் முயற்சி செய்கிறேன்" என முடித்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications















