சோனாக்ஷி குண்டாக என் தம்பி தான் காரணம்: சல்மான் கான்
மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா குண்டாக தபாங் 2 படம் தான் காரணம் என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
குண்டாக உருண்டையாக இருந்த சோனாக்ஷியை நீ நடிக்க வந்தால் என்ன என்று சல்மான் உசுப்பேத்திவிட்டு ஜிம்முக்கு போக வைத்தார். சோனாக்ஷியும் ஜிம்மில் தவம் கிடந்து கொஞ்சம் உடம்பைக் குறைத்துவிட்டு வந்தார். அவர் சல்மான் கானுடன் சேர்ந்து தபாங் படத்தில் நடித்தார். படமும் சூப்பர் ஹிட்டானது.
பாலிவுட்டில் சைஸ் ஜீரோ ஹீரோயின்களுக்கு நடுவே சோனாக்ஷி கொஞ்சம் புஸ்டியாகத் தான் இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது இன்னும் கொஞ்சம் புஸ்டியாகிவிட்டார். இந்த சோனாக்ஷி ஏன் இப்படி ஊதிக்கிட்டே போகிறார் என்று பலரும் அவரை விமர்சிக்கின்றனர். இந்நிலையில் அவர் வெயிட் போட தபாங் 2 படம் தான் காரணம் என்று கூறியுள்ளார் சல்மான் கான்.

தபாங்
பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி கடந்த 2010ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் தபாங் படம் மூலம் நடிகையானார்.

தபாங் 2
தபாங் வெற்றியை அடுத்து சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தனது அண்ணன் மற்றும் சோனாக்ஷியை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

சோனாக்ஷி குண்டானது ஏன்?
தபாங் 2ல் 3-4 மாத கர்ப்பிணியாக வருகிறாராம் சோனாக்ஷி. அதனால் தான் அவரை வெயிட் போடச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அர்பாஸ். இது தெரியாமல் பலர் சோனாக்ஷி குண்டாகிவிட்டார், குண்டாகிவிட்டார் என்று சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.

பாவம் சோனாக்ஷி
படத்திற்காக சோனாக்ஷி வெயிட் போட்டதற்காக கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். தபாங் ரிலீஸான மறு வருஷமே இரண்டாம் பாகத்தின் வேலைகளை துவங்கிவிட்டோம். அதனால் சோனாக்ஷியிடம் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவர் ஒரு திறமையான நடிகை என்றார் சல்மான் கான்.

கப்பார் சிங், ஒஸ்தி
தபாங் படத்தை தமிழில் சிம்புவை வைத்து ஒஸ்தி என்று எடுத்தார்கள். ஆனால் படம் ஊத்திக் கொண்டது. அதே படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்தனர். படம் பிச்சிக்கிட்டு ஓடியது.


Click it and Unblock the Notifications











