»   »  "பேட் பாய்" முதல் "சூப்பர் ஸ்டார்" வரை... "தபாங்" நாயகனின் தடதடக்கும் திரையுலக வரலாறு!

"பேட் பாய்" முதல் "சூப்பர் ஸ்டார்" வரை... "தபாங்" நாயகனின் தடதடக்கும் திரையுலக வரலாறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானின் திரையுலக வரலாறு முள் பாதையும், ரோஜாத் தோட்டமும் கலந்த வித்தியாசமான வரலாறாகும். பேட் பாய் என்ற பெயரைப் பெற்றிருந்த இவர் இன்று பாலிவுட்டின் முக்கியமான சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அடுத்தடுத்து ஹிட் கொடுத்து இன்னும் பாலிவுட்டில் கோலோச்சி வரும் நாயகர்களில் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர்.

இவரது திரையுலக வாழ்க்கைப் பாதையில் எத்தனை எத்தனை நிகழ்வுகள்... சங்கடங்கள், சர்ச்சைகள், சலனங்கள், மோதல்கள், சாதனைகள் என அனைத்தும் கலந்த கலவைதான் சல்மான் கான்.

சல்லு என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் சல்மான் கான், இன்று 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரை நம்பியுள்ள பாலிவுட் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விழா நாயகன்

வெள்ளி விழா நாயகன்

49 வயதான சல்மான் கான் இந்தித் திரையுலகில் பல முத்திரைப் படங்களைக் கொடுத்த முன்னணி நடிகர். மைனே பியார் கியா, ஹம் ஆப்கே ஹெய்ன் கோன், கரன் அர்ஜூன், ஜுட்வா, பியாக் கியா டு தர்னா கியா, ஹம் சாத் சாத் ஹெய்ன் (இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் மான் வேட்டையாடி சிக்கினார்) என பல ஹிட் படங்களின் நாயகன் சல்மான்.

முன்பு பேட் பாய்

முன்பு பேட் பாய்

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சல்மானுக்கு நிறைய கெட்ட பெயர்கள் இருந்தன. முரட்டுத்தனமான செயல்பாடுகளால் பேட் பாய் என்ற பெயரைப் பெற்றிருந்தார். ஆனால் கடந்த 10 வருடங்கள் அவரது வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்...!

சிறையில் கழிந்த சில நாட்கள்

சிறையில் கழிந்த சில நாட்கள்

2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி நடந்த விபத்துக்குப் பின்னர் சல்மான் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டார். காவல் நிலைய லாக்கப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

சாதா சாப்பாடு, சாதா டீ

சாதா சாப்பாடு, சாதா டீ

பந்த்ரா காவல் நிலைய லாக்கப்பில் சாதாரண கைதிகளுடன் அவர் அடைக்கப்பட்டார். அப்போது தனக்காக வீட்டிலிருந்த சாப்பாடு, டீ ஆகியவற்றை அவர் ஏற்கவில்லை. மாறாக காவல் நிலையத்தில் தந்த சாப்பாடு, டீயையே சாப்பிட்டார்.

ரூ. 14.5 லட்சம் நிவாரணம்

ரூ. 14.5 லட்சம் நிவாரணம்

விபத்து நடந்த பின்னர் பாம்பே உயர்நீதிமன்ற்தில் தொடரப்பட்ட ஒரு பொது நலன் மனுவை விசாரித்த கோர்ட், மொத்தமாக ரூ. 14.5 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக கோர்ட்டில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டது. சல்மானும் அதைச் செய்தார். தற்போது அந்தத் தொகை இறந்தவரின் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படவுள்ளது.

2002க்குப் பிறகு

2002க்குப் பிறகு

2002ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார் சல்மான். 2003ல் தேரே நாம். 2004ல் முஜ்சே ஷாதி கரோகி, 2005ல் நோ என்ட்ரி ஆகியவை ஹிட் படங்களாக அமைந்தன. அதேசமயம், ஜான் இ மன், சலாம் இ இஷ்க், மேரிகோல்ட், பாபுல் ஆகியவை தோல்விப்படங்களாக அமைந்தன. இருப்பினும் கோவிந்தாவுடன் இணைந்து நடித்த பார்ட்னர் மீண்டும் அவருக்கு லைம் லைட் கொடுத்தது.

சரச்சைகள் - சண்டைகள்

சரச்சைகள் - சண்டைகள்

சல்மான் கானுக்கும், சர்ச்சைகளுக்கும் எப்போதும் ஏகப் பொருத்தம். பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். மீடியாக்கள் பலவற்றுடன் மோதியுள்ளார். சில சினிமாப் பத்திரிகைகள் இவரது செய்திகளைப் போடாமல் தடை கூட விதித்தன 90களில்.

அனைவருக்கும் பிடித்த மாதிரி

அனைவருக்கும் பிடித்த மாதிரி

முன்பு பலரும் தள்ளிப் போன, பயந்து பார்த்த, வெறுத்த நாயகனாக வலம் வந்த சல்மான் கான் கடந்த பத்து ஆண்டுகளில் அனைவராலும் விரும்பப்படும் மனிதராக மாறியிருக்கிறார். அனைவராலும் நேசிக்கும் மனிதராக அவர் மாறியிருக்கிறார். இதற்காக சல்மானை பாராட்ட வேண்டும்.

தங்கமான மனசு

தங்கமான மனசு

சல்மான் பார்க்கவும், செயல்பாடுகளிலும்தான் முரட்டுத்தனமாக இருப்பாரே ஒழிய உண்மையில் அவருக்கு தங்கமான மனசு என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

அன்பான மகன்

அன்பான மகன்

சல்மான் கானுக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர் கூறுகையில், பெற்றோருக்கு மிகவும் கீழ்ப்படிதலான மகன் சல்மான். தனது தந்தையின் 2வது மனைவி ஹெலனைக் கூட அவர் மிகவும் மதித்தார். மரியாதை கொடுத்தார்.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

2002-03 ஆண்டுகள் சல்மானுக்கு மிகவும் மோசமான ஆண்டுகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மைனே பியார் கியா, ஹம் ஆப்கே ஹெய்ன் கோன், ஹம் தில் தி சுக்கே சனம் போன்ற ஹிட் படங்கள் அவரை தேற்றின.

மாறி விட்டார்

மாறி விட்டார்

சல்மான் கான் நிறைய மாறி விட்டார். முன்பு போல அவர் இல்லை. காலம் அவரை பக்குவப்படுத்தியுள்ளது. நிறைய மாற்றி விட்டது. அவர் பழைய சல்மான் கான் இல்லை என்றார்.

2002 முதல் வேற மாதிரி

2002 முதல் வேற மாதிரி

2002ம் ஆண்டுக்குப் பிறகு சல்மான் கானிடம் நிறைய மாற்றங்கள் வந்தன. அவர் சமூக சேவையில், மனிதாபிமான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார்.

பீயிங் ஹியூமன்

பீயிங் ஹியூமன்

பீயிங் ஹியூமன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அவர் தொடங்கினார். இந்த அமைப்புக்கு சல்மான் கான் பவுண்டேஷன் ஆதரவு அமைப்பாக இருந்தது. இந்த அமைப்பின் மூலம் மகாராஷ்டிராவிலும், மகாராஷ்டிராவுக்கு வெளியிலும் பல கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தினர்.

ஒரு மனிதன் மாற சிறைவாசம்தான் சரியான வழி என்றில்லை.. உணர்ந்து திருந்தினாலே போதும்..!

English summary
From being labelled as a 'bad boy' of Bollywood to the reigning superstar, Salman Khan's meteoric rise in the film industry has been equally turbulent and rewarding. The 49-year-old actor, who was convicted by a Mumbai court on the charge of culpable homicide not amounting to murder, is the second big star from Mumbai film industry after Sanjay Dutt to get embroiled in a high-profile criminal case in recent years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more