அஜித்தின் குட் பேட் அக்லி மாஸாக இருக்கும்.. செம எனர்ஜி கொடுக்கும்.. சீக்ரெட் சொன்ன பிரபலம்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித் குறித்தும் குட் பேட் அக்லி படம் குறித்தும் நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அஜர்பைஜான் நாட்டில் வைத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அங்கு பெரும்பாலான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.
செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். இதற்கிடையே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார்.
மிரட்டும் அஜித்: படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் நடந்துவருகிறது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை ஆதிக் ரவிச்சந்திரன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் உடல் எடையை குறைத்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோட் சூட்டில் ரகளையாக இருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். இந்நிலையில் படம் குறித்து நடன இயக்குநர் கல்யாண் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
கல்யாண் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "அஜித்தின் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தக்கூடிய படமாக குட் பேட் அக்லி இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்துமே வேற லெவலில் இருக்கும். ரசிகர்களுக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுக்கும். மேலும் அந்த எனர்ஜியோடு அஜித்தின் நடனமும் இருக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க மாஸாக இருக்கும். வசூலிலும் சக்கைப்போடு போடும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











