விசுவாசம் ஷூட்டிங்கில் குரூப் டான்சர் திடீர் மரணம்.. ரூ. 8 லட்சம் கொடுத்து உதவிய அஜித்!

விசுவாசம் ஷூட்டிங்கில் உயிரிழந்த டான்சர் உடலை சென்னை கொண்டுவர உதவியுள்ளார் அஜித்.

Recommended Video

ஷூட்டிங்கில் உயிரிழந்த டான்சருக்கு அஜித் செய்த உதவி

சென்னை: விசுவாசம் படப்பிடிப்பின்போது திடீரென உயிரிழந்த நடனக் கலைஞரின் உடல் புனேயில் இருந்து சென்னை வந்தடைய நடிகர் அஜித் ரூ. 8 லட்சம் பணம் கொடுத்து உதவியது தற்போது தெரிய வந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு புனேயில் நடந்து வருகிறது.

திடீர் உடல்நலக்குறைவு:

திடீர் உடல்நலக்குறைவு:

கடந்த சனிக்கிழமையன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அஜித்திற்கு பின்புறம் ஆடிக் கொண்டிருந்த குரூப் டான்சர்களில் சரவணன் என்பவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை ஓய்வெடுக்க வைத்துள்ளனர்.

மருத்துவமனை:

மருத்துவமனை:

ஆனால் அவரது உடல்நிலை மோசமாகவே அஜித் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளார். படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் மருத்துவமனை இருந்துள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விமானம்:

விமானம்:

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அஜித், சரவணனின் உடலை புனேயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்ல ரூ 8லட்சம் பணம் கொடுத்து நிதியுதவி செய்துள்ளார்.

சோகம்:

சோகம்:

சரியான நேரத்தில் அஜித் செய்த உதவியால் சரவணனின் உடல் சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. குரூப் டான்சரான சரவணனின் திடீர் மரணத்தால் அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X