'சதாம் உசேன்' தனுஷ்!
| Click here for more images |
வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படம் கற்றது தமிழ். ஜீவாவின் வித்தியாசமான நடிப்பால் படம் சக்சஸ் ஆகியுள்ளது. ராமுக்கும் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.
அடுத்து ராம், தனுஷை வைத்து சதாம் உசேன் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். கதையை தனுஷிடம் சொன்னவுடன் அவர் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம்.
சமூகத்தை பாதிக்கும் தீய செயல்களை அழிக்கப் புறப்படும் இளைஞனின் கதையாம் இது. படத்தின் கதை தனுஷுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம்.
மேலும் பாவனாவை ஹீரோயினாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய தனுஷ், பாவனாவையும் அணுகி நடிக்குமாறு கேட்டுள்ளார். கதையைக் கேட்டு இம்ப்ரஸ் ஆகி சரி என்று கூறியுள்ளாராம்.
தனுஷுக்கும், ராமுக்கும் ராசியான யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைக்கிறார். தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவே தனது ஆர்.கே.புரடக்ஷன் மூலமாக தயாரிக்கவுள்ளார்.
தற்போது இந்த நிறுவனம் யாரடி நீ மோகினி படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து தெலுங்கில் ஹிட் ஆன ஆர்யா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
சரி சதாம் உசேன் என்ற பெயர் தமிழா, அரபியா? வரி விலக்கு கிடைக்குமா??


Click it and Unblock the Notifications











