கெளதம் படத்தில் தனுஷ்?
கெளதம் மேனனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கலாம் எனத் தெரிகிறது. தனுஷிடம் கதையைக் கூறி அவரது சம்மதத்தை கெளதம் மேனன் பெற்றுள்ளாராம்.
தொலைந்து போய் விட்ட பிரேக்கைத் தேடி ரொம்ப நாளாக அலைபாய்ந்து கொண்டிருக்கும் தனுஷ், பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் பரட்டை பெரும் அப்செட்டை கொடுத்து விட்டது.இந்த நிலையில் தற்போது பொல்லாதவன் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் தனுஷ். இப்படத்திற்காக மெனக்கெட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் வலியக்க வந்த வாய்ப்பாக கெளதம் மேனனின் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது தனுஷுக்கு. வாரணம் ஆயிரம் படத்தின் குழப்பத்தால் சற்றே அப்செட் ஆகியிருந்த கெளதம் மேனன், தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனுஷிடம் கதை ஒன்றையும் கூறியுள்ளார். கதை தனுஷுக்கும் பிடித்துப் போய் விட்டதாம். அனேகமாக பொல்லாதவனை முடித்து விட்டு இப்படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
காக்க காக்க மூலம் சூர்யாவுக்குப் பெரிய பிரேக் கொடுத்தவர் கெளதம். அதேபோல தனுஷையும் அவர் காப்பாற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











