தெலுங்கு ரீமேக்கில் தனுஷ்
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஆர்யா படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
| Click here for more images |
அல்லு அர்ஜூனா தெலுங்கில் நடித்த ஆர்யா பெரும் வெற்றியைப் பெற்ற படம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் பெற்றது.
இதில் நடிக்க பெரும் போட்டியே நிலவியது. சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் முட்டி மோதினர். ஆனால் வெற்றி இப்போது தனுஷுக்குக் கிடைத்துள்ளதாம்.
தற்போது பொல்லாதவன், யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், இவற்றை முடித்து விட்டு ஆர்யாவுக்கு வருகிறார்.
இப்படத்தை இயக்கப் போவது பாலசேகரன். லவ் டுடேவுக்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு மாதவனை வைத்து ஆர்யா படத்தை இயக்கினார் பாலசேகரன். இதையடுத்து தற்போது தெலுங்கு ஆர்யாவின் ரீமேக்குக்கு வருகிறார்.
தெலுங்கு ஆர்யாவுக்கு தமிழில் என்ன பெயரோ?
Comments


Click it and Unblock the Notifications