ஹீரோ .. ஹீரோ ..
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் தனுஷ் பெரிய நோட்டுக்கு புக் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்தப் படத்தை இயக்கப் போவதுசெல்வராகவனாம்.
துள்ளுவதோ இளமையில் வெளியில் தெரிய ஆரம்பித்து, காதல் கொண்டேன் மூலம் சூப்பர் ஹிட் நடிகர் ஆகி விட்ட தனுஷ் இப்போதுதன்னைத் தேடி ஓடி வரும் படங்களால் திக்கு முக்காடிப் போயுள்ளார்.
இருப்பினும் அப்பா கஸ்தூரி ராஜாவும், அண்ணன் செல்வராகவனும் கூடிப் பேசி, ஆராய்ந்து நல்ல படங்களாக தேர்வு செய்து அதில் தனுஷைநடிக்க வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஏ.எம்.ரத்னம் அடுத்துத் தயாரிக்கவுள்ள படத்திற்கு தனுஷ் புக் ஆகியுள்ளார். இந்தப் படத்தை செல்வராகவன்இயக்கவுள்ளார்.
ரத்னம் படம் என்பதற்காக மட்டும் தனுஷை புக் செய்யவில்லையாம். செல்வராகவனுக்கும், தனுஷுக்கும் பெரிய நோட்டுகொடுத்துள்ளதால், உடனே புக் ஆகி விட்டார்களாம்.
காத்து அடிக்குது, தூத்திக்கிறாங்க!
More from Filmibeat
cinema gayathiri raghuram karthik kiran kousalya lanka prabhakaran prabhu radha ramanan ramya revathi sham tamil news tamilnadu thatstamil vijay vijay kanth


Click it and Unblock the Notifications











