தாடி, மீசையோடு 'மிரட்டும்' ஜி.வி. 'டார்லிங்' பிரகாஷ்
சென்னை: தான் நடித்துள்ள டார்லிங் படத்தை நினைத்தால் த்ரில்லாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாமா ஏ.ஆர். ரஹ்மான் வழியில் இசையமைப்பாளர் ஆன ஜி.வி. பிரகாஷ் பென்சில் படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அந்த படம் வெளிவராத நிலையில் அவர் டார்லிங் என்ற திகில்-காமெடி படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நிக்கி கல்ராணி, ஸ்ருஸ்தி என இரண்டு நாயகிகள் உள்ளனர்.

தாடி
டார்லிங் படத்தின் படப்பிடிப்பு வெறும் 30 நாட்களில் நடந்து முடிந்தது. படத்தில் ஜி.வி. தாடி, மீசையுடன் முரட்டுத்தனமாக தெரிகிறார்.

ஒரிஜினலை விட
டார்லிங் தெலுங்கில் ஹிட்டான பிரேம கதா சித்திரத்தின் ரீமேக் ஆகும். தனது படம் பிரேம கதா படத்தை விட நன்றாக இருக்கும் என்றார் ஜி.வி.

சூப்பர் தயாரிப்பாளர்கள்
டார்லிங் படத்தின் மூலம் இரண்டு சூப்பர் தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்துள்ளது எனக்கு பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது என்று ஜி.வி. தெரிவித்தார். படத்தை ஞானவேல்ராஜாவும், தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தயாரித்துள்ளனர்.

காமெடி
டார்லிங் படத்தில் ஜி.வி. மிரட்ட கருணாஸ் காமெடி செய்கிறார். படத்திற்கு இசையும் ஜி.வி. தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்ட்
கோலிவுட் ரசிகர்களுக்கு அண்மை காலமாக பேய் காமெடி படங்கள் தான் பிடித்துள்ளது. இந்நிலையில் தான் டார்லிங் ரிலீஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











