அர்ஜுன் எதிர்பார்க்காத பிறந்தநாள் பரிசை கொடுத்து அசத்திய மகள்கள்
Recommended Video

அர்ஜுனுக்கு பசுமாட்டை பரிசளித்த மகள்கள்-வீடியோ
சென்னை: நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளுக்கு அவரின் மகள்கள் ஸ்பெஷலான பரிசு கொடுத்துள்ளார்கள்.
நடிகர் அர்ஜுன் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் மகள்களான ஐஸ்வர்யாவும், அஞ்சனாவும் அவருக்கு ஸ்பெஷலான பரிசு கொடுக்க நினைத்தார்கள்.

அந்த பரிசை அவரின் பிறந்தநாள் அன்று கொடுக்க முடியாமல் போனது. அந்த பரிசை அண்மையில் தான் தந்தைக்கு கொடுத்து அவரை அசத்தியுள்ளனர்.
பசுமாடு ஒன்றை அர்ஜுனுக்கு பரிசளித்துள்ளார்கள் ஐஸ்வர்யாவும், அஞ்சனாவும். அந்த பசுவுக்கு புண்ணியகோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அப்பாவுக்காக பசு மாட்டை குஜராத்தில் இருந்து கொண்டு வந்துள்ளனர் அவர்கள். பசுமாட்டுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











