எல்லாமே போச்சு.. மகனை நினைத்து கண்கலங்கிய ஸ்ரீகாந்த்.. மகனுக்காக என்னென்ன செஞ்சிருக்காரு தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் பெரிய அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது நடிகர் ஸ்ரீகாந்த்தின் கைது. கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியதன் காரணமாக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சூழல் இப்படி இருக்க நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார்; அந்த ஜாமீன் மனுவில் தனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீனி நிராகரித்துவிட்டது.

இயக்குநர் சசி இயக்கிய ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்தப் படத்தில் சாக்லேட் பாயாக தோன்றிய அவர் முதல் படத்திலேயே அசால்ட்டாக ஸ்கோரி செய்தார். அப்படம் ஹிட்டானதை அடுத்து அவர் ஏப்ரல் மாதத்தில், போஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தன. இதன் காரணமாக கோலிவுட்டில் இவர் பெரிய ரவுண்டு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

சொதப்பிய ஸ்ரீ: ஆனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துகொண்டே சென்றன. இதற்கிடையே வந்தனா என்பவரை திருமணம் செய்தார். அவர்களது திருமண வாழ்க்கையிலும் சச்சரவுகள் வந்தன. இரண்டு பேரும் விவாகரத்து செய்வார்கள் என்று பலரும் சொல்லிய சூழலில் மீண்டும் அவர்கள் சேர்ந்துவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க ஸ்ரீகாந்த்துக்கு பட வாய்ப்புகள் மட்டும் வரவில்லை. பிறகு நண்பன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். அது அவருக்கு ஓரளவு கம்பேக்காக அமைந்தது.

ஸ்ரீகாந்த் கைது: அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் சில படங்களில் ஹீரோவக நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அது போதாதென்று போதை பொருள் பயன்படுத்தியதாக அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் பார் ஒன்றில் செய்த தகராறு காரணமாக கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மற்றும் பிரதீப் என்பவர் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

actor Srikanth who was arrested in a drug case did for his son
Photo Credit:

அதனையடுத்து அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஸ்ரீகாந்த் முதலில் மறுத்தார். பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதை பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதனால் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய மகனை பார்த்துக்கொள்ள வேண்டும். போதை பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். எனது குடும்பத்தில் பிரச்னை இருக்கிறது என்று கூறினார். ஆனால் அவருக்கு ஜாமீன் தர நீதிபதி மறுத்துவிட்டார்.

மகன் மீது பாசம்: நிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்க மகன் மீது ஸ்ரீகாந்த் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததும் கவனிக்கத்தக்கது. அதாவது ஸ்ரீகாந்த்தின் மகனான ஆஹில் ஸ்ரீகாந்த் தந்தை போல் சினிமா துறைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை அள்ளியிருக்கிறார். கண்டிப்பாக விளையாடு துறையில் தனக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு என நம்பியிருந்தார் ஆஹில். அவருக்கு ஸ்ரீகாந்த்தும் தனது முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி ஆஹில் படிக்கும் பள்ளியில் ஏதேனும் நிகழ்ச்சி நடந்தால் அதில் முதல் ஆளாக கலந்துகொள்வாராம் ஸ்ரீகாந்த். மேலும் தனது மகன் அந்த நிகழ்ச்சியில் ஏதாவது பெர்ஃபார்மன்ஸ் செய்தாலோ; விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும்போதோ ஒரு தந்தையாக நேரில் சென்று அவ்வளவு உற்சாகப்படுத்துவாராம். மகனும் தன்னுடைய தந்தைதான் தனக்கு நெருங்கிய நண்பர் என்ற மனநிலையில் இருப்பாராம். இப்படி மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதால்தான் நீதிமன்றத்தில் அவர் அப்படி கலங்கியதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். அதேசமயம் இவ்வள்வு பாசம் வைத்த ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் சிக்கி இப்போது மகனுக்கும் பெரிய மன உளைச்சலை கொடுத்துவிட்டார்; விரைவில் இந்த சிக்கலிலிருந்து அந்தக் குடும்பம் மீண்டும் வர வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X