கமல், விஜய், அஜீத், சூர்யா இன்னிக்கு எங்கே ஓட்டுப் போடப் போறாங்கன்னு தெரியுமா?

By Shankar

சென்னை: தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கே வாக்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதி ஆர்வம். நடிகர்களும் இந்த விவரங்களை ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரு நாள் முன்பே சொல்லிவிடுவார்கள்.

ரஜினி

ரஜினி

ரஜினி எந்த வாக்குச் சாவடியில் ஓட்டுப் போடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். வழக்கம் போல தன் வீட்டுக்கு அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களிக்கிறார். கடந்த முறை அவர் வாக்களித்த போது, எந்த சின்னத்துக்கு அவர் வாக்களித்தார் என்பதை படமெடுத்து பரபரப்பு கிளப்பியது நினைவிருக்கலாம்.

கமல்

கமல்

கமல் ஹாசன் பெங்களூரில் ‘உத்தமவில்லன்' படப்பிடிப்பில் உள்ளார். ஓட்டுப் போடுவதற்காக இன்று படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வருகிறார். காலை 8 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் அவரது அலுவலகத்துக்கு எதிரே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டுவிட்டு பெங்களூர் பறக்கிறார்,

விஜய்

விஜய்

‘கத்தி' படப்பிடிப்பில் பிஸியாக உள்ள விஜய், அடையாறில் உள்ள மாநகராட்சி பள்ளியில் காலையிலேயே ஓட்டு போடுகிறார்.

சூர்யா

சூர்யா

நடிகர் சூர்யா, ‘அஞ்சான்' படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். கார்த்தியும் விளம்பர படமொன்றுக்காக மும்பை சென்றுள்ளார். இருவரும் ஓட்டு போடுவதற்காக விமானம் மூலம் சென்னை வருகின்றனர். தியாகராயநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் பகல் 12 மணிக்கு ஓட்டு போடுகிறார்கள். அவர்களுடன் நடிகர் சிவகுமார், சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரும் அதே வாக்கு சாவடியில் ஓட்டு போடுகின்றனர்.

அஜீத்

அஜீத்

நடிர் அஜீத் திருவான்மியூர் குப்பம் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் காலை 7 மணிக்கு மனைவி ஷாலினியுடன் சென்று ஓட்டு போடுகிறார்.

விஷால்

விஷால்

விஷால் அண்ணா நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஓட்டு போடுகிறார். விக்ரம் பெசன்ட் நகரில் ஓட்டு போடுகிறார். ஜெயம் ரவி, ஜீவா, பரத், ஆர்யா, நடிகை த்ரிஷா போன்றோரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஓட்டு போடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X