»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபு தேவாவுடன் நடிப்பதற்கு பல நடிகைகளும் தயங்குகிறார்கள்ளாம். முதல் காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது மன்மத லீலைகள்தான்.

ஆனால், இரண்டாவது மிக முக்கியமான காரணம் என்ன தெரியுமா? தேவாவின் ராசி தான்.

தென்னிந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், ரப்பர் மேன், போன்லெஸ் தேவா என்றெல்லாம் "புகழப்படும்" பிரபு தேவாவின் "ராசி " படுபயங்கரமானது. அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு அது தான் கடைசி படமாகி விடுகிறதாம்.

பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் நடித்தால் போதும், அடுத்து அவர்களைப் பார்க்க முடியாது என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

ஷில்பா ஷெட்டி மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்தார். அத்தோடு தமிழில் அவர் காலி. இந்தியிலும் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்.ஜேம்ஸ்பாண்டு என்று டப்பா படம் வந்தது. அதில் ரேணுகா தேசாய் என்று ஒரு நடிகை வந்தார். அவரை அதற்குப் பிறகு எங்கேயும்காணவில்லை.

ப்ரூ காபி போன்ற விளம்பரங்களில் நடித்து சந்தோஷமாக இருந்து வந்த ஜெயா சீல் என்பவரைப் பிடித்து பெண்ணின் மனதைத் தொட்டுஎன்று ஒரு படம் எடுத்தார்கள். பிரபு தேவாவுடன் நடித்த அவரும் அதற்குப் பிறகு காணோம். விளம்பரப் படங்களில் கூட அவரைப் பார்க்கமுடியவில்லை.

உள்ளம் கொள்ளை போகுதே என்று ஒருபடம். அஞ்சலா சவேரி என்று ஒரு நடிகை. அதற்குப் பிறகு ஏதாவது படத்தில் அவர்நடித்திருக்கிறாரா என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

கீர்த்தி ரெட்டி நினைவிருக்கும் வரை படத்தில் நடித்தார். அத்தோடு சரி. மும்தாஜுக்கு கடும் போட்டியாக வருவார், மந்த்ராவை தூக்கி தூரஅடிப்பார் என்று படு பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்ட ராதிகா செளத்ரி, டைம் படத்தில் பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்தார். அவரது டைம்அன்று முதல் சரியில்லை.

அள்ளித் தந்த வானம் நேகாவுக்கும் (அதே படத்தில் நடித்த லைலாவுக்கும் இப்போது மார்க்கெட் கொஞ்சம் டல்தான்) அதே கதிதான்.

மனதைத் திருடி விட்டாய் படத்தில் நடித்த காயத்ரி ஜெயராமை அதற்குப் பிறகு காணவில்லை. அவருக்கும் பிரபு தேவா ராசிபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

கெளசல்யாவைக் கவிழ்ததார். கடைசியாக காயத்ரி ரகுராமுடன் சார்லி சாப்ளின் படத்தில் நடித்துள்ளார். அவர் கதிஎன்ன ஆகிறது என்று பார்ப்போம்.

இவர் பத்தாது என்று இப்போது அண்ணன் ராஜு சுந்தரம், தம்பி நாகேந்திர பிரசாத் என குடும்பமே ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்துஒன்..டூ..த்ரீ படத்தில் நடித்து வருகிறார்கள். ஜோ என்ன ஆகப் போகிறாரோ தெரியவில்லை.

இதில் தப்பியவர் சிம்ரன் மட்டுமே. ஒரு படத்திற்கு மேல் பிரபு தேவாவுடன் நடித்தும் கூட தாக்குப் பிடித்து விட்டார். எப்படி??

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more