Devara Box Office: ஜூனியர் என்டிஆரை காப்பாற்றிய காந்தி ஜெயந்தி.. தேவரா வசூல் இன்று எப்படி இருக்கும்?
சென்னை: விஜய்யின் கோட் படத்தை விட மிகவும் மோசமான விமர்சனங்களால் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை ஜூனியர் என்டிஆரின் தேவரா தவறவிட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், விஜய்யின் கோட் படத்தை விட தேவரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக கூறுகின்றனர்.
திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையான நேற்று ஜூனியர் என்டிஆர் தேவரா படம் கடும் சரிவை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்த நிலையில், அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி தேவரா படத்தை காப்பாற்றியுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் உருவான தேவரா திரைப்படம் 3 நாட்களில் 304 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், 6வது நாளான இன்றுடன் 400 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் படை: டோலிவுட்டில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி என ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் தனியாக ரசிகர் படை பெருமளவில் உள்ளன. ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தை தாரக் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான இன்று மீண்டும் படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்று சூடு பிடிக்கத் தொடங்கியது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
400 கோடி கிளப்: விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் 13 நாட்களில் 400 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், 6வது நாளிலேயே தேவரா திரைப்படம் 400 கோடி கிளப்பில் இன்று இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2வது வாரமான இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் படம் வசூல் செய்தால் அதிகபட்சம் 500 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பாற்றிய காந்தி ஜெயந்தி: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் நடித்த தேவரா திரைப்படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மற்ற இடங்களில் பலத்த அடி வாங்கியுள்ளது. இந்தி பெல்ட்டிலும் சுமாரான ஓட்டம் தான் வார நாட்களில் ஓடிவரும் நிலையில், காந்தி ஜெயந்தியான இன்று டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளதாகவும் இன்றைய முடிவில் 380 கோடி முதல் 400 கோடி வசூலை தேவரா படம் தொடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
பிரசாந்த் நீல் இயக்கத்தில்: யஷ்ஷை வைத்து கேஜிஎஃப், பிரபாஸை வைத்து சலார் படங்களை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். அந்த படம் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலும் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், வாடிவாசல் படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆரை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
100 கோடி சம்பளம்: தேவரா படத்தின் முதல் பாகம் தான் வெளியாக உள்ள நிலையில், 2வது பாகத்தையும் எடுத்து முடிக்கும் முயற்சியில் கொரட்டலா சிவாவும் இருப்பதாக கூறுகின்றனர். தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆரின் சம்பளம் 80 கோடி ரூபாயில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











