»   »  ரஜினி சார் ஒரு சூரியன்: தனுஷ்Vs

ரஜினி சார் ஒரு சூரியன்: தனுஷ்Vs

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐம் த ஹேப்பியஸ்ட் மேன் இன் தி வேர்ல்ட் என்று கத்தாத குறையாக படு சந்தோஷமாக இருக்கிறார் தனுஷ்.

ஒரே படத்தில் கோலிவுட்டின் உச்சிக்குச் சென்ற ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். துள்ளுவதோ இளமையில் கவனிக்கப்பட்டார்,அடுத்த படமான காதல் கொண்டேன், தனுஷை அடுத்த கமலோ என்று ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது.

அதைத் தொடர்ந்து வந்த திருடா திருடி மூலம் தனுஷுக்கு பொடிப் பசங்க கூட்டம் ரசிகர் கூட்டமாக மாற, களை கட்ட ஆரம்பித்தது தனுஷ்மார்க்கெட். ஆனால் எந்த வேகத்தில் மேலே போனாரே, அதே வேகத்தில் சறுக்க ஆரம்பித்தார் புதுப்பேட்டையிலிருந்து சரவணன் மூலம்.

அதைத் தொடர்ந்து சகட்டுமேனிக்கு தோல்விப் படங்கள். சுள்ளான் சூப்பர் டூப்பர் திவால் படமாக வந்து சேர்ந்தது. தேவதையைக் கண்டேன்கொஞ்சம் போல மூச்சுக் காற்றைக் கொடுத்தது. ஆனால் ட்ரீம்ஸ் கைவிட்டு விட்டது.

கடந்த 3 வருடங்களாக தனுஷின் மார்க்கெட் தண்ணீரையேக் காணாத பாலைவனமாக பட்டுப் போய்க் கிடந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்டபுதுப்பேட்டையும் கூட வசூல் ரீதியாக தோற்றுப் போகவே மண்டை காய்ந்து கிடந்தார் தனுஷ்.

ஆனால் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தது திருவிளையாடல் ஆரம்பம். தனுஷுக்கு தை>யத்தையும், சந்தோஷத்தையும் ஒரு சேரக் கொடுத்துதம்பியை துள்ளாட்டம் போட வைத்துள்ளது.

கல்யாணத்திற்குப் பிறகு வந்த தேவதையைக் கண்டேன், ட்ரீம்ஸ், புதுப்பேட்டை ஆகியவை தோல்வி அடைந்ததால், கல்யாணத்தால்தான் இந்தசறுக்கல் என்று பலர் கதை கட்ட ஆரம்பித்தனர். ஆனால் கல்யாணத்தால்தான் இப்போது திருவிளையாடல் ஆரம்பத்தின் மூலம் மீண்டும் வெற்றிக்கனியை ருசித்துள்ளார் தனுஷ்.

தொடர் தோல்வியால் துவண்டு கிடந்த மாப்பிள்ளைக்கு, மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அவரது நடிப்பில்இருந்த சில குறைகளை சுட்டிக் காட்டி சரி செய்யும் வழியைக் காண்பித்தாராம்.

மிஸ்டர் பாரத்தின் கதையை கொஞ்சமாக உல்டா செய்து படம் எடுக்குமாறு அவர்தான் ஐடியா கொடுத்தாராம். அதன்படி உருவானதுதான்திருவிளையாடல் ஆரம்பம். படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆர்வத்தோடு ஃபாலோ செய்து வந்தாராம்.

படத்தின் முதல் காப்பியைப் பார்த்து, கிளைமாக்ஸ் காட்சியில் சில திருத்தங்களையும் சொன்னாராம். அத்தோடு நில்லாமல், பத்தி>க்கையாளர்காட்சியின்போது, தியேட்டர் (ஃபோர் பிரேம்ஸ்) மானேஜர் கல்யாணத்தைக் கூப்பிட்டு பத்திரிக்கை அன்பர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்என்பதை அறிந்து தனக்குச் சொல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.

இப்படி தனுஷின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்தப் படத்தின் மீது தனுஷை விட ரஜினிதான் படு கவனமாக இருந்துள்ளார். இப்போது பாக்ஸ்ஆபிஸ் ஹிட் ஆகி விட்டது படம். தனுஷ் தரப்பு படு உற்சாகமாக இருக்கிறது.

சந்தோஷத்தில் இன்னும் சின்னப் பையனாக மாறி, ஸ்வீட்ஹார்ட் ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த தனுஷை ஒருஅழகான நாளில் சந்தித்து பேசினோம்.

திருவிளையாடல் வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்.?

எனக்கும், எனது குடும்பத்துக்கும் மறக்க முடியாத படம் இது. எனது மகன் யாத்ரா ரிலீஸ்ஆன பிறகு வெளியான படம் இது. அவனது தந்தைக்குபெருமையையும், புகழையும் கூடவே கொண்டு வந்து சேர்த்துள்ளான் யாத்ரா.

ஒரு நடிகனகா இது எனக்கு மிகப் பெரிய வெற்றி, நிம்மதியாக இருக்கிறது. தொடர்ந்து நான்கு தோல்விப் படங்களைக் கொடுத்த எனக்கு நிச்சயம்இது பெரிய நிம்மதிதான்.

தோல்வியினால் நான் துவண்டு போகவில்லை. நல்ல பாடங்களாக அவை அமைந்தன. திரையுலகின் நிஜ முகத்தை தெ>ந்து கொள்ள எனக்குஇந்தத் தோல்விப் படங்கள் உதவின.

மிஸ்டர் பாரத் கதை போலவே திருவிளையாடல் இருக்கிறதே?

இருக்கலாம். நான் மிஸ்டர் பாரத்தை பல தடவை பார்த்துள்ளேன். படத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை ரஜினி கலக்கியிருப்பார். படத்தையேஅவர்தான் தூக்கிச் சுமந்திருப்பார். அது மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படம். என்னுடைய படத்தை அந்தப்படத்துடன் ஒப்பிட முடியாது.

சூப்பர் ஸ்டாரின் பாதிப்பு இல்லாமல், காப்பி அடிக்காமல் யாராச்சும் இங்கே நடிக்கிறார்களா, சொல்லுங்க. திருவிளையாடலுக்கு மிஸ்டர் பாரத்தான்இன்ஸ்பிரேஷனாக இருந்தது, ஒத்துக் கொள்கிறேன். ஆனால் திரைக்கதையில் நாங்கள் நிறைய வித்தியாசங்களைக் காட்டியிருந்தோம்.

கதைத் தேர்வு, நடிப்பில் ரஜினி ஆலோசனை சொல்வதுண்டா?

எனக்கு அவர் மாமனார் என்றாலும் கூட அவரை நான் மாமா என்றோ அங்கிள் என்றோ அழைப்பதில்லை. இன்னும் சார் என்றுதான்கூப்பிடுகிறேன். அங்கிள் என்றாவது கூப்பிடக் கூடாதா என்று எனது மனைவி பலமுறை என்னிடம் கூறி விட்டார். ஆனால் அப்படிக் கூப்பிடுவதுகஷ்டம் சார்.

அவர் மீது அந்தளவுக்கு மரியாதை உள்ளது. எனக்கு அவர் உறவினர் என்பதைத் தாண்டி இன்றைய இளம் நடிகர்களுக்கு ஒரு முன் மாதி>யாகஅவர் விளங்குகிறார்.

எனக்கு அவர் பல ஆலோசனைகளைச் சொல்லியுள்ளார். நடிப்பில் சில திருத்தங்களையும் கூறியுள்ளார். திருவிளையாடல் ஆரம்பிப்பதற்கு முன்புகூட கேரக்டர் குறித்து அவர் அக்கறை காட்டினார். பெண்களின் வெறுப்பை சம்பாதிக்கும்படியான கேரக்டரில் நடிக்கக் கூடாது என்றுஅறிவுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் பெண்களை மட்டுமல்லாது, குழந்தைகளையும் கூட கவரும் வகையிலான கதைகளில் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன் (அன்புள்ளதனுஷ்?)

அடுத்த படம்?

அடுத்து பரட்டை என்கிற அழகுசுந்தரம்தான். சுரேஷ்கிருஷ்ணா இயக்குகிறார். கேயார் தயா>க்கிறார். மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடிக்கிறார்.கிளைமாக்ஸ் காட்சிக்கு படம் வந்து விட்டது.

தேசிய விருது பெற்ற அர்ச்சனா எனக்கு அம்மாவாக நடிக்கிறார். அவருக்கு முன்னால் நாங்கள் எல்லாம் பச்சா. அவ>டமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.

மீராவால் பிரச்சினை வந்ததாமே?

சிலருக்கு வதந்தி கிளப்புவதே வேலை. இன்று என்னைப் பற்றிச் சொல்வார்கள், நாளை மீராவைப் பற்றிச் சொல்வார்கள், அடுத்த நாள் இன்னொருவதந்தியைக் கிளப்புவார்கள். இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டால் பைத்தியமே பிடித்து விடும்.

எனக்கு இந்த வதந்திகள் குறித்துக் கவலையே இல்லை. மீராவால் இப்படத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பூசல் ஏதும் இல்லாமல்சிறப்பாக நடித்தக் கொடுத்து வருகிறார்.

சிம்புவுக்கும், உங்களுக்கும் புதிதாக டைட்டில் போர் கிளம்பியுள்ளதே?

எனது மாமனாரின் வெற்றிப் படங்களில் ஒன்றுதான் பொல்லாதவன். அந்த டைட்டிலை எனது அடுத்த படத்திற்குச் செலக்ட் செய்துள்ளேன்.இப்போது பழைய படங்களை ரீமேக் செய்வது சாதாரணமாகி வருகிறது.

எனவேதான் பொல்லாதவன் டைட்டிலை மட்டும் பயன்படுத்த முடிவு செய்தோம். அதை ரஜினி சாரிடம் சொன்னபோது சந்தோஷமாகஆமோதித்தார்.

ரஜினி சார் நடித்த சுமார் 20 படங்களின் பெயர்களை புதிதாக இப்போது தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்து வைத்துள்ளனர் என்று நான்கேள்விப்பட்டேன்.

சிம்பு என்ன டைட்டில் வைத்துள்ளார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.

மாமாவுடன் சேர்ந்து நடிப்பீர்களா?

கண்டிப்பாக நடிக்க மாட்டேன் சார். ரஜினி சார், ரஜினி சார்தான். நாங்கல்லாம் போய் அவர் கூட நடிக்க முடியுமா.? அவர் ஒரு சூரியன்,நாங்கல்லாம் நட்சத்திரங்கள். அவ்வளவுதான்.

செல்வராகவன் நல்ல கிரியேட்டர், நீங்க எப்படி?

செல்வா, நல்ல கதை சொல்லி. தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு விட்டார். அவர் திரைக்கதை அமைப்பதில் எடுத்துக் கொள்ளும்அக்கறையை நான் பார்த்து வியந்துள்ளேன். அதேசமயம், எனக்கு நடிப்புதான் ரொம்ப ஈசி சார். படம் இயக்குவது குறித்தெல்லாம் எனக்குயோசனையே இல்லை. எதிர்காலத்தில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் உங்களது குரு யார்?

ரஜினி சார், கமல், விக்ரம்.

செல்வா தயாரிப்பில் படம் நடிப்பதாக இருந்தீர்களே, என்னாச்சு?

ஆமா, நடிக்கணும், அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை. செல்வாவின் ஒயிட் எலிபன்ட் யூனிட்டின் படத்தில் நான் ஒரு படம் பண்ணவுள்ளேன்.கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாதான் இப்படத்தை இயக்கப் போகிறார். யுவன் இசையமைக்கிறார். அதுமட்டுமல்ல அவரும் கூட இந்தநிறுவனத்தில் ஒரு பார்ட்னர். இந்தப் படம் திரையுலகில் புதிய வரலாறு படைக்கும்.உங்களோட கனவு கேரக்டர்?

என் உடம்புக்கும், வயசுக்கும் ஏற்ற மாதிரியான எந்தக் கேரக்டராக இருந்தாலும் ஒ.கேதான் சார்.

Read more about: rajini is like sun says dhanush

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil