»   »  பொல்லாதவன் Vs

பொல்லாதவன் Vs

Subscribe to Oneindia Tamil

சிம்புவுக்கும், தனுஷுக்கும் இடையே இருந்த பஞ்சாயத்து சரியாகி இருவரும் மாப்ளே, மச்சான் என பாசத்தை புதுப்பித்துக் கொண்ட நிலையில்மறுபடியும் ஒரு முட்டல் லேசாக ஆரம்பித்து மறைந்துள்ளது.

சிம்புவும், தனுஷும் சின்னப் புள்ளையிலிருந்தே தோழர்கள். இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். தனுஷுக்கு முன்பே சிம்பு ஹீரோவாகிவிட்டாலும், காதல் கொண்டேன் படத்தின் மூலம் தனுஷ் திடீரென உச்சத்திற்குப் போக இருவருக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்பட்டது.

இதையட்பு நட்பு பணால் ஆகி இருவரும் முட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் தனுஷின் நேரமோ என்னவோ அவர் நடித்த படங்கள்வரிசையாக சொதப்ப ஆரம்பித்தன. அதே நேரம் மன்மதன் மூலம் உச்சிக்குப் போனார் சிம்பு.

இதையடுத்து தனது படங்களில் தனுஷை வம்பிக்கிழுப்பது போல காட்சிகளை வைத்தார் சிம்பு. இதனால் விரிசல் விலாவாரியாகிப் போனது.

தொடர்ந்து இருவரும் முட்டிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இரு தரப்பு முக்கியஸ்தர்களும் கூடிப் பேசி சண்டை வேண்டாம், சமாதானம் எனபேசி முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்தே, தனுஷ் சிம்புவைப் பாராட்ட, பதிலுக்கு சிம்புவும் தனுஷ் என் நண்பன்தான் என ஆமோதிக்க சுபமாகமுடிந்தது அவர்களின் சின்னப் புள்ளச் சண்டை.

ஆனால் சமீபத்தில் மறுபடியும் லேசாக ஒரு முட்டல் ஏற்பட்டுள்ளதாம். பொல்லாதவன் என்ற தலைப்பில் புதுப் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

அவரது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் பொல்லாதவன். இதே தலைப்பைவைத்தால் மாமனார் என்ன நினைப்பாரோ என தனுஷ் யோசித்துள்ளார்.

ஆனால் ரஜினியோ, ஆஹா, நல்ல டைட்டில் தாராளமா யூஸ் பண்ணிக்குங்கோ என்று தலையாட்டி விட்டாராம். இதனால் தனுஷ் தரப்பு உற்சாகமாகிவிட்டது.

இந் நிலையில்தான் சிம்புவின் புதுப் படத்துக்கு மோசமானவன் என்ற பெயர் வைக்கப்பட்டது. இது தன்னைத்தான் குறி வைத்து சூட்டப்படும்டைட்டில் என தனுஷ் நினைத்துள்ளார்.

இதையடுத்து சிம்புவை வெறுப்பேற்ற பொல்லாதவன் படத்தில் தனக்கு ஜோடியாக நயனதாராவைப் போடலாம் என தனுஷ் தரப்பு முடிவுசெய்ததாம். நயனதாராவை அணுகி கேட்டுள்ளனர். முதலில் சரி என்று கூறி விட்டாராம் நயனதாரா.

ஆனால் அப்புறம் என்ன யோசித்தாரோ தெரியவில்லை, ஸாரி சொல்லி விட்டாராம். இதனால் தனுஷ் தரப்பு புஸ்ஸாகிப் போனதாம். சரி இதற்குமேல் பஞ்சாயத்து பண்ண வேண்டாம், பொழப்பைப் பார்க்கலாம் என அடுத்த ஹீரோயினை தேடினார்களாம்.

அதில் தெலுங்கில் இப்போது ஹிட் ஆகி வரும் பூனம் சிக்கியுள்ளார். படு சூடாக இருக்கிறார் பூனம். பெயருக்கேற்ப பூணை போல மென்மையாகஇருக்கிறார். ஆனால் கிளாமரில் புலியாக மாறிப்புடுவாராம். அவர்தான் இப்போது பொல்லாதவனில் தனுஷின் நாயகியாக நடிக்கவுள்ளார்.

கொசுறு: ரஜினியின் இன்னொரு சூப்பர் ஹிட் படமான தில்லுமுல்லு படத்தின் டைட்டிலை ஜெயம் ரவி சுட்டுள்ளாராம். அதே பெயரில் விரைவில்அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்களாம்.

பழசை தொடச்சு எடுப்பதில் நம்மாளுங்க கில்லாடிங்கப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil