தனுஷையும் கவிழ்த்த சுரேஷ்கிருஷ்ணா!

By Staff

பாபா மூலம் ரஜினிக்கு மறக்க முடியாத அடியைக் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இப்போது அவரது மருமகன் தனுஷுக்கும் செமத்தியான அடியைக் கொடுத்துள்ளார்-பரட்டை என்கிற அழகுசுந்தரம் மூலமாக.

குதுப்மினார் போல உயர்ந்து நின்றிருந்த ரஜினியின் மார்க்கெட்டை, பைசா நகர கோபுரம் போல சாய்த்து சரித்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாபா என்ற ஒற்றைப் படம் மூலம் ரஜினியை சரித்து விட்டவர் சுரேஷ் கிருஷ்ணா.

அந்த சரிவிலிருந்து ரஜினியால் மீள முடியுமா, சூப்பர் ஸ்டார் அவ்வளவுதானா என்றெல்லாம் கேட்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. அந்த அளவுக்கு ஆணித்தரமான சரிவைக் கொடுத்த சுரேஷ்கிருஷ்ணா இப்போது ரஜினியின் மருமகன் தனுஷுக்கும் செமத்தியான சரிவைக் கொடுத்திருக்கிறார்.

கன்னடத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ஜோகி. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தால், அதில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார் ரஜினி. இதையடுத்து அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் இயக்குநர் கேயார்.

டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தனுஷ், மீரா ஜாஸ்மின் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ராஜு சுந்தரம் மாற்றப்பட்டர். சுரேஷ் கிருஷ்ணா இயக்குநரானார்.

படம் வேகமாக வளர்ந்து முடிந்தது. ரிலீஸ் ஆகப் போகும் நேரத்தில் சம்பளப் பாக்கி வைத்து விட்டார் கேயார் என பிரச்சினையைக் கிளப்பினார் தனுஷ். பின்னர் இதுவும் ஒரு வழியாக சரியாகி படமும் ரிலீஸ் ஆனது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் படு சொதப்பலாக இருப்பதால் பிளாப் வரிசையில் சேர்ந்துள்ளதாம். திரைக்கதையில் வேகமோ அல்லது லாஜிக்கோ இல்லை. தனுஷின் தீவிர ரசிகர்களுக்குக் கூட படம் பிடிக்காமல் போய் விட்டதாம்.

ஒரிஜினல் படத்தில் இருந்த பெப் இப்படத்தில் இல்லை. கதையை சொதப்பலாக படமாக்கி விட்டார் சுரேஷ்கிருஷ்ணா என தனுஷ் தரப்பு படு அதிருப்தியாக உள்ளதாம்.

பாபா படத்துக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா சந்திக்கும் 4வது பிளாப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பரட்டை சுருட்டையாகி விட்டதால் தனுஷ் குட்டிச் சேரில் சுருண்டு உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாராம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X