»   »  பொல்லாத தனுஷ்

பொல்லாத தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடித்த பொல்லாதவன் மறுபடியும் தமிழில் உருகிறது. மருமகன் தனுஷ்தான் நாயகன். தலைப்புமட்டும்தான் பொல்லாவன், ஆனால் படத்தின் கதை முற்றிலும் வேறாம்.

ரஜினி, லட்சுமி நடிப்பில் 80களில் வெளியான லோ பட்ஜெட் படம் பொல்லாதவன். முக்தா சீனிவாசன்தயாரித்திருந்தார். படம் சூப்பர் ஹிட்

அந்தப் படத்தின் டைட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு தனுஷ் நடிப்பில் புதிய படத்தை உருவாக்கப்போகிறார் வெற்றி மாறன். இவர் தனுஷை வைத்து இரு படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியனிடம் உதவிஇயக்குநராக இருந்தவர்.

பொல்லாதவன் படத்தின் பூஜை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. படத்திற்கு வெயில் புகழ் ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை வெற்றி மாறன் பார்த்துக் கொள்கிறார்.

குரூப் கம்பெனி என்கிற புது நிறுவனம் பொல்லாதவனை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக இருக்கலாம்,ஆனால் இதை நிறுவியது தனுஷும், பூபதி பாண்டியனும்தான் என்று ஒரு தகவல் உலவுகிறது.

இந்தப் பொல்லாதவன் எப்படி இருப்பார்? இது முற்றிலும் மாறுபட்ட படம் என்று எல்லோரும் சொல்வது போல(பொய்) சொல்ல விரும்பவில்லை. சாதாரண கதைதான். ஆனால் அதை வித்தியாசப்படுத்திக் காட்டப்போகிறேன்.

தனுஷுக்கு இப்போ நல்ல நேரம் ஆரம்பித்துள்ளது. பழைய தனுஷாக மாறியுள்ளார். அதை சரியான முறையில்இப்படத்தில் பயன்படுத்தப் போகிறேன் என்கிறார் வெற்றி மாறன்.

மாறன் வெல்லட்டும், தனுஷ் துள்ளட்டும்!

Read more about: danush in ‘pollathavan’

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil