ஹீரோ .. ஹீரோ ..

By Staff
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்வது எனது திறமைக்குக் கிடைத்தபரிசாகக் கருதுகிறேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் பகுதியில் அது ஒரு கனாக்காலம் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது தனுஷ் கலந்துகொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார்.

படப்பிடிப்புக்கு இடையே தனது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்யப் போவதாக நான் நினைக்கவில்லை.

23 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முன்பே தீர்மானித்திருந்தேன். இப்போது 2ஆண்டுகளுக்கு முன்பாகவே எனது லட்சியம் நிறைவேறியுள்ளது.

எனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து நான் கவலைப்படவில்லை. எனதுதிறமை காரணமாகவே ஐஸ்வர்யா எனக்குக் கிடைத்துள்ளார். அது பெருமையைத் தருகிறது.

அது ஒரு கனாக்காலம் படம் முடியவடையவுள்ளது. வருகிற தீபாவளிக்கு எனது ட்ரீம்ஸ் படம் வருகிறது. அது ஒருகனாக்காலம் எனது 8வது படமாகும்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர் படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் விருதுவாங்கியிருக்கிறார்கள். எனக்கும் விருது கிடைத்தால் சந்தோஷம்.

நான் அதிக சம்பளம் வாங்குகிறேன் என்று கூறுவது எல்லாம் உண்மையில்லை. எனது உழைப்புக்கேற்றஊதியத்தைத்தான் ஒவ்வொரு படத்திலும் வாங்குகிறேன் என்றார் தனுஷ்.

பின்னர் இயக்குநர் பாலுமகேந்திரா நிருபர்களிடம் பேசுகையில், இந்தப் படத்தில் தனுஷூக்கு மிகவும்வித்தியாசமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் நன்றாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக அவருக்கு விருதுகிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

தனுஷைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்களும், திரளான ரஜினி ரசிகர்களும் ஷூட்டிங் நடந்த இடத்தில்குழுமியிருந்தனர்.

இதற்கிடையே, தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெறும் என கூறப்படுகிறது.சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுமாம். ரஜினிகாந்த்துக்கும் திருப்பதியில்தான் திருமணம்நடந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X