»   »  பரட்டை என்கிற அழகுசுந்தரம்

பரட்டை என்கிற அழகுசுந்தரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கன்னடத்தில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ஜோகி. இந்தப்படம் இப்போது தமிழுக்கு வருகிறது. ரஜினிகாந்த் தான் இந்தப் படத்தைப் பாரத்து பிரமித்துப் போய், தனதுமருமகன் தனுஷை அதில் நடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பிரபல இயக்குனர் கேயார் தயாரிப்பில் ஜோகி தமிழில் உருவாகிறது. படத்தை டான்ஸ் மாஸ்டர்ராஜு சுந்தரம்தான் (இவரும் கன்னடம் தான்) இயக்கப் போகிறார். இயக்கத்தில் இதுதான் அவரது முதல் படம்.

தனுஷ் நாயகனாக நடிக்கிறார். முதலில் தமிழிலும் ஜோகி என்றே பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் தற்போதுபரட்டை என்கிற அழகுசுந்தரம் என மாற்றி விட்டனர்.

ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் அவருடைய கேரக்டருக்கு பரட்டை என்றுதான பெயர். அந்தபெயரையே மருமகன் கேரக்டருக்கும் சூட்டி விட்டார் இயக்குனர் ராஜுசுந்தரம்.

ரஜினியை நினைவுபடுத்தும் வகையிலயேயே பரட்டை என்ற பெயரை சூட்டினார்களாம். மேலும் கேரக்டரின்தோற்றத்திற்கும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தாராம் ராஜு.

தனுஷுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிககவுள்ளார்.

தனுஷ் தற்போது திருவிளையாடல் படத்தில் நடிதது வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வரும் 21ம் தேதிபரட்டை என்கிற அழகுசுந்தரத்திற்கு மாறுகிறார் பரட்டை.. ஸாரி தனுஷ்.

இதில் தனுஷின் அம்மா கேரக்டரில் முன்னாள் நாயகி அர்ச்சனா நடிக்கிறார். படத்தில் இந்த அம்மாகதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தாய்-மகன் பாசப் போராட்டத்தை வைத்துத் தான் கதையேநகரவுள்ளது.

கன்னடத்தில் அருந்ததி நாக் இந்த ரோலில் அசத்தியிருந்தார்.

கேரக்டரைப் பற்றி சொன்னவுடனேயைே சந்தோஷமாகிப் போன அர்ச்சனா நான் நிச்சயம் நடிக்கிறேன் என்றுகூறிவிட்டாராம்.

பரட்டையாவது தனுஷின் ஆட்டம் காணும் மார்க்கெட்டுக்கு எண்ணெய் தேய்ச்சு, தலைசீவி விடட்டும்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil