‘வேலையில்லாப் பட்டதாரி’... இதாங்க தனுஷின் 25வது படத்தின் பெயர்

சென்னை: சுதந்திர தினமான நேற்று தனுஷின் 25வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். அதன் படி தனுஷின் படப்பெயர் நேற்று வெளியிடப்பட்டது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 25வது படத்திற்கு 'வேலையில்லாப் பட்டதாரி ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தந்து 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய தனுஷ், அன்று தனது 25வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் 3 படங்களில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய வேல்ராஜின் இயக்கத்தில் தனது அடுத்தப் படம் எனத் தெரிவித்திருந்தார்.

ஜாப்லெஸ் கிராஜுவேட்....

ஜாப்லெஸ் கிராஜுவேட்....

அப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுதந்திர தினமான நேற்று அறிவிக்கப் படும் என சொல்லப்பட்டது. அதன் பேரில், தனது 25வது படத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இதனை தனுஷ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அமலா பால் ஜோடி...

அமலா பால் ஜோடி...

இப்படத்தில் முதன் முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் அமலாபால். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு....

விரைவில் படப்பிடிப்பு....

படத்திற்கு இசை ‘கொலைவெறிப் புகழ்' அனிருத். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் 20ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

குடும்பப்பாங்கான படம்...

குடும்பப்பாங்கான படம்...

படத்தில் அமலாபாலிற்கு அழகான் சென்னைப்பெண் கதாபாத்திரமாம். மொத்தத்தில் இப்படம் நல்ல குடும்பப்பாங்கான படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X