என்ன தீர்ப்பு வேணா வரட்டும்.. நான் அடுத்த பட பூஜையில் பிசி.. வைரலாகும் தனுஷின் டி44 பிக்ஸ்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள நடிகர் தனுஷின் டி44 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது. இயக்குநர் ஜவகர் மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா என மூன்று ஹீரோயின்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் விவகாரத்தில் நடிகர் தனுஷுக்கு எதிராக இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நடிகர் தனுஷ் தனது அடுத்தப்பட பூஜையில் பிசியாகி உள்ளார்.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டோலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் இப்படி அசுர வேகத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகர்கள் வேற யாருமே இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

டி44 பூஜை

டி44 பூஜை

டி43 படமான மாறன் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி44 படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. தற்போது அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வேட்டி சட்டை

வேட்டி சட்டை

ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நடிகர் தனுஷ் இந்தியாவுக்கு திரும்பிய நிலையில், டி 44 படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள பூஜை புகைப்படங்களில் நடிகர் தனுஷ் வேட்டி சட்டையில் செம கெத்தாக காட்சியளிக்கிறார்.

யாரடி நீ மோகினி இயக்குநர்

யாரடி நீ மோகினி இயக்குநர்

தனுஷ், நயன்தாரா மற்றும் ரகுவரன் நடிப்பில் மெகா ஹிட் படமாக வெளியான யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக உள்ளது.

ஒயிட் கலர் சுடிதார்

ஒயிட் கலர் சுடிதார்

இன்று நடைபெற்ற பட பூஜை விழாவில் நடிகை நித்யா மேனன் கலந்து கொண்டார். நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் பங்கேற்ற பூஜை போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெள்ளை நிற சுடிதாரில் நடிகை நித்யா மேனன் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இன்று நடைபெற்ற பட பூஜையில் இருவரும் வேட்டி சட்டை அணிந்து செம பக்கவாக போஸ் கொடுத்து அசத்தி உள்ளனர்.

3 ஹீரோயின்கள்

3 ஹீரோயின்கள்

டி44 படத்தில் நடிகர் தனுஷுக்கு மொத்தம் 3 ஹீரோயின்கள். ராஷி கன்னா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகைகள் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசை

அனிருத் இசை

நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி மீண்டும் இந்த படத்தின் மூலமாக இணைகிறது. 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ராக்ஸ்டார் அனிருத் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து பணியாற்றவில்லை இந்நிலையில், இந்த காம்போ மீண்டும் இணைந்துள்ளது டிஎன்ஏ ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ரோல்ஸ் ராய்ஸ் கார்

நடிகர் விஜய்யை தொடர்ந்து அவரை போலவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கி இருக்கும் நடிகர் தனுஷும் நுழைவு வரி விலக்கு கேட்டு கடந்த 2015ல் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. பால் காரர்களே வரி செலுத்தும் நிலையில், தனுஷ் போன்ற நடிகர்கள் ஏன் செலுத்த மறுக்கின்றனர் என நீதிபதி சுப்ரமணியம் காரசார கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அபராதம் இல்லை

அபராதம் இல்லை

நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகை விதித்தது போல நடிகர் தனுஷுக்கு எந்தவொரு அபராதத் தொகையும் நீதிபதி விதிக்கவில்லை. மேலும், தேச விரோதி ரேஞ்சுக்கும், ரீல் ஹீரோ ரியல் ஹீரோ கமெண்ட்டுகளையும் நீதிபதி தவிர்த்துள்ளார். ஆனால், நடிகர் தொழிலை ஏன் மறைக்க வேண்டும் என்கிற கேள்வியை பலமாக எழுப்பி உள்ளார்.

வரி கட்ட ரெடி

வரி கட்ட ரெடி

நடிகர் தனுஷ் இந்த வழக்கில் வரி கட்ட ரெடி என தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரி விலக்கு கேட்டு பலர் இது போன்ற வழக்குகளை தொடர்ந்தது போலத் தான் நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷும் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு தொடர அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்ணன் இயக்கத்தில்

அண்ணன் இயக்கத்தில்

டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ள நிலையில், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள நானே வருவேன் (பெயர் மாற்றப்பட உள்ளது) தெலுங்கு படம் எல்லாம் எப்போது தொடங்கும் என்கிற கேள்விக் குறியும் உருவாகி இருக்கிறது. மாறன் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் அசுர வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Dhanush -யை வெச்சி செய்த நீதிபதி 2 நாளில் 30 லட்சம் கட்டுங்க! | Thalapathy Vijay, Rolls Royce
சம்பள உயர்வு

சம்பள உயர்வு

தெலுங்கில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் கொடுக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழில் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்களுக்கும் பல கோடி ரூபாய்க்கு சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X