அட செமயா இருக்காங்களே.. தனுஷ் 51 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்.. படக்குழு அதிர்ச்சி

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனது 51ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

Dhanush 51st Movie Shooting Spot Video Leaked on Social Media

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படத்தையும் அவரே இயக்குகிறார். அதுதொடர்பான வேலைகள் முடிந்துவிட்டன. கண்டிப்பாக பவர் பாண்டி படம் போல இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

என்ன கதை: சில நாட்களுக்கு முன்பு தனுஷ் 50 படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன. படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் தனுஷ் கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கெத்தாக நிற்க; அவருக்கு பின்னால் காளிதாஸ் ஜெயராமும், சந்தீப் கிஷனும் ஒரு ஃபாஸ்ட் புட் கடை செட்டப்பிலிருந்து எட்டி பார்க்கும்படி இருந்தார்கள். போஸ்டருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.

தனுஷ் 51: இதற்கிடையே தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனது 51ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏற்கனவே தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார் தனுஷ். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் தனக்கான மார்க்கெட்டை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்ற கணக்கை போட்டிருக்கிறார் தனுஷ்.

வெளியான வீடியோ: படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. இந்நிலையில் தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அதில் தனுஷும், ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறார்கள். இரண்டு பேரும் ஒரு வீட்டின் கேட்டில் இருக்கும்படியும்; தனுஷை ராஷ்மிகா மந்தனா அழைத்து செல்லும்படியும் காட்சிகள் இடம்பெற்றிருகின்றன. இதனைப் பார்த்த படக்குழுவினர் எப்படி வீடியோ வெளியானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேசமயம் ரசிகர்களோ, அட தனுஷுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகுதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X