»   »  விஐபி 2வை அடுத்து மேலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்

விஐபி 2வை அடுத்து மேலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 பட வேலையில் பிசியாக இருக்கும் தனுஷ் மாரி 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி(விஐபி) படம் ஹிட்டானது. இதையடுத்து விஐபி 2 படத்தை தனுஷ், அமலா பாலை வைத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.

Dhanush to act in Maari 2

இந்த படத்தை ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். பாலிவுட் நடிகை கஜோல் 20 ஆண்டுகள் கழித்து விஐபி 2 மூலம் மீண்டும் கோலிவுட் வருகிறார்.

இந்நிலையில் தனுஷின் அடுத்த படம் எது என்பது தெரிய வந்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த மாரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பாலாஜி மாரி படத்தின் 2 பாகத்தை எடுக்க உள்ளார். திரைக்கதையை எழுதி முடித்து அதை தனுஷுக்கு அனுப்பியும் வைத்துவிட்டார். இந்த பட வேலை விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Read more about: dhanush, தனுஷ்
English summary
Balaji Mohan has finished writing the script of Maari 2 and sent it to his hero Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil