பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்
Recommended Video

சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு மெகா கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை தனுஷ் தற்போது தான் பார்த்துள்ளார். பா. ரஞ்சித் தயாரித்த அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தனுஷ் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?. படத்தை பார்த்த தனுஷ் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தேன். மிகவும் அருமை. நாமே அந்த கதாபாத்திரங்களுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். மாரி செல்வராஜின் அடுத்த படம் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் என்னுடன் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திறமையான அவருடன் வேலை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் தனுஷ்.
இயக்குனர்
தனுஷின் ட்வீட்டை பார்த்த மாரி செல்வராஜ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித்
தனுஷ், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு ஆகியோர் கூட்டணி சேர்வதை பார்த்து இயக்குனர் பா. ரஞ்சித் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தாணு
தனுஷின் ட்வீட்டை பார்த்த கலைப்புலி தாணு, இந்நாள் பொன்னாள் உவகை பொங்கும் நன்னாள்! என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











