நடிகராவது சுலபம். ஆனால், நிலைத்து நிற்பது சிரமம்...: தனுஷ்
சென்னை: நடிகராவது சுலபம். ஆனால், நிலைத்து நிற்பது சிரமமான காரியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் டைரக்டு செய்துள்ள இப்படத்தை, தனுஷே தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.
இந்நிலையில், நேற்று இப்படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் தனுஷ். அப்போது அவர் கூறியதாவது :-

25வது படம்...
நான், 14 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். 'வேலையில்லா பட்டதாரி'எனக்கு 25-வது படம்.

தலைகீழ் நிலைமை...
முன்பெல்லாம் நடிகராவது கஷ்டமானதாக இருந்தது. வந்தபின், அதிர்ஷ்டம் இருந்தால் நிலைக்கலாம். ஆனால் இப்போது, நடிகராவது சுலபம். ஆனால், நிலைத்து நிற்பது சிரமம்.

ரசிகர்களின் அன்பும், ஆதரவும்....
நான் 14 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் காரணம்.

முக்கியமான படம்...
'வேலையில்லா பட்டதாரி,'நல்ல கதை. எனக்கு முக்கியமான படமாக இருக்கும். என் 25-வது படத்தில் விவேக் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடந்துள்ளது.

அமலாபால்...
அமலாபாலும், நானும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடிக்க முயன்றும் நடக்கவில்லை. இந்த படத்தில் அது நடந்திருக்கிறது. அவருக்கு, பக்கத்து வீட்டுப்பெண் 'இமேஜ்'இருக்கிறது. மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.

சரண்யா....
1980-90-களில் மனோரமா இல்லாத படமே இருக்காது. இப்போது சரண்யா அம்மா வேடத்தில் நடிக்காத படமே இல்லை. அவரும், சமுத்திரக்கனியும் இந்த படத்தில் என் அம்மா-அப்பாவாக நடித்து இருக்கிறார்கள்' என இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











