ஏ.ஆர்.ரஹ்மான் வாசிக்க.. தனுஷ் பாட.. ஒரே மேடையில் தேரே இஷ்க் மெய்ன் கச்சேரிதான்.. செம வீடியோ
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் தேரே இஷ்க் மெய்ன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படமானது நவம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே தனுஷும், இயக்குநர் ஆனந்த் எல்.ராயும் இணைந்த ராஞ்சனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. எனவே இப்படம் மீதும் அதீத ஹைப் அனைவருக்குமே எழுந்திருக்கிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான இட்லி கடை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தியேட்டர்களில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் ஓடிடியில் வெளியான பிறகு பலரும் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். படத்தில் பிற்போக்குத்தனமான கருத்தை தனுஷ் பேசியிருப்பதாகவும்; இது எப்படி தியேட்டர்களில் வரவேற்பை பெற்றது என்றும் வைத்து செய்துவிட்டார்கள். இதனை கண்டிப்பாக படக்குழு எதிர்பார்த்திருக்காது.
ஹிந்தியில் தனுஷ்: இதற்கிடையே ஹிந்தியிலும் ஜொலித்துவரும் தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஆனந்த்தும், தனுஷும் சேர்ந்து ராஞ்சனா படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அப்படம் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ரீ ரிலீஸில்கூட அப்படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

தேரே இஷ்க் மெய்ன் எப்படி இருக்கும்?: அதேபோல் தேரே இஷ்க் மெய்ன் படமும் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி நம்பிக்கையை விதைத்திருக்கிறது. காதல் சப்ஜெக்ட்டாக உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் - கீர்த்தி சனோனின் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது தெரிகிறது. அடுத்த ஃபேவரைட் ஜோடியாக அவர்கள் மாறுவார்கள் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை: இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் சிறந்த இசையை கொடுத்த ரஹ்மான் இதற்கும் அப்படியே கொடுத்திருக்கிறார். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிஎரது.
என்ன வீடியோ: அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு வாசித்தார். அப்போது படத்தில் இடம்பெற்றிருக்கும் நல்ல காலம் வந்துடுச்சு நான் பெத்த ஐயா என்ற பாடலை தனுஷ் அதற்கு ரஹ்மான் பின்னணியில் இசை அமைத்தார். இந்தப் பாடல் அங்கு ஃபெர்ஃபார்ம் செய்யப்பட்டதை பார்த்து கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள். இதுதொடர்பான வீடியோதான் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











